• சன்பீம் சி.பி.எஸ்.இ. தொடக்க பள்ளி விளையாட்டு விழா
· சன்பீம் சி.பி.எஸ்.இ. தொடக்க பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா - துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார் பரிசு வழங்கி பாராட்டு.
வேலூர் மாவட்டம், காட்பாடி, சன்பீம் சி.பி.எஸ்.இ தொடக்க பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார். பள்ளி மாணவர் தலைவி ரித்திமாரூஹல் வரவேற்றார். விளையாட்டு ஆண்டறிக்கை காணொளி மூலம் தொகுத்து வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினருக்குப் பள்ளியின் தாளாளர் தங்கபிரகாஷ் நினைவு பரிசு வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார் கலந்து கொண்டு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற நேரு அணிக்கும், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 250 மாணவ, மாணவிகளுக்கும், 13 ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
விழாவில் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார் பேசுகையில்,
பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு கைபேசி கொடுப்பதை தவிர்த்து விளையாட்டில் ஈடுபட ஊக்கப்படுத்த வேண்டும். பெற்றோர்களும் கைப்பேசி பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும். விளையாட்டு மட்டுமே குழந்தைகளுக்கு மன வலிமையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
தன்னுடைய பிள்ளைகளின் திறமை அறிந்து அவர்களுக்கு உகந்த விளையாட்டில் ஈடுபட செய்வது பெற்றோர்களின் கடமை ஆகும். மாணவர்கள் விளையாட்டில் திறமை வாய்ந்தவர்களாக உருவாவதற்கு காரணமாக இருப்பவர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள். அவர்களே மாணவர்களை நல்ல பண்பு உடையவர்களாகவும் ஒழுக்கம் உடையவர்களாகவும் உருவாக்குகின்றனர். அவர்களை ஒருபோதும் நாம் மறக்க கூடாது என்றார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி மாணவர் தலைவர் ரோஹித் ராம் நன்றி கூறினார்.

Comments
Post a Comment