• ஆக்ஸ்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளாஸ்டிக் இல்லா நாள் விழிப்புணர்வு பயிற்சி


 ·        ஆக்ஸ்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளாஸ்டிக் இல்லா நாள் விழிப்புணர்வு பயிற்சி - வேலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் கே.விஸ்வநாதன் பயிற்சி.

     வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம், ஒடுக்கத்தூர் பகுதியில் இயங்கி வரும் ஆக்ஸ்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 1. பிளாஸ்டி இல்லா நாள், 2. புத்துணர்ச்சி ஊட்டும் புதுமை கணித விளையாட்டும், வடிவியலும் மற்றும் புதிர்களும் என்ற தலைப்பில் அமர்வு நடந்தது.

      குழந்தைகள் கட் பண்ணுவது, ஒட்டுவது, உருவங்களை உருவாக்குவது, புதிர் விடைகளை கண்டுபிடிப்பது போன்ற புதுமையான விஷயங்களில் புத்தகத்தை தாண்டி பள்ளியில் செயல்பாடுகள் என்ற தலைப்பில் மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டார்கள். இப்படி கணிதத்தில் சிந்திக்க கற்று கொடுத்தால் எதிர்காலத்தில் குழந்தைகளிடத்தில் ஆளுமை தன்மை கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் மற்றும் பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பை சிறப்பாக செய்யும் தன்மைகளை உருவாக்குவதற்கான பயிற்சி நடைபெற்றது.

            மேலும் பிளாஸ்டிக் இல்லாத நாள் இவற்றில் பிளாஸ்டிக் குறிப்பாக ஒருமுறை தூக்கி எறியும் பிளாஸ்டிக் கேரி பேக் என்று சொல்லக்கூடிய தன்மையில் உள்ள அத்தனை பிளாஸ்டிக் பொருள்களையும் பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களை பற்றியும், இதனால் ஏற்படும் வியாதிகளை பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது. மாணவர்கள் சிறுவயதிலேயே வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை, அபாயகரமான குப்பை என்று தரம் பிரித்து Zero waste முறையில் பொது இடங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்றும், தன் வீட்டையும் பள்ளியிலேயும் பிளாஸ்டிக் பயன்பாடு அற்ற சமூகத்தை உருவாக்க என்ன முறை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

    ஒரு முறை தூக்கி எறியும் பிளாஸ்டிக் உரையினால் கால்நடைகள் சாப்பிடுவதினால் செத்து கொண்டிருப்பதும், ஊட்டியில் மான்கள் செத்துக் கொண்டிருப்பதும், கேரளா ஐயப்பன் கோவில் இருக்கும் இடத்தில் யானைகள் செத்துக் கொண்டிருப்பதும், கடலில் பிளாஸ்டிக் பொருள்களினால் ஏற்படும் விஷத்தன்மையினால் மீன்கள் மலடாக்கி கொண்டிருப்பதையும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

   துணிப்பை எளிதானது. தூக்கி எறிந்தால் மண்ணில் உரமாவது. ஆனால் பிளாஸ்டிக் பை அழகானது தூக்கி எறிந்தால் மண் விஷமாவது என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த பூமியை காப்பாற்றப்பட வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு இருக்கிறது. மேலும் ஒரு பிளாஸ்டிக் கவர் பூமிக்குள் சென்று விட்டால் ஒரு மில்லியன் ஆண்டுகள், அதாவது 10 லட்சம் ஆண்டுகள் அவை மக்குவதற்கு எடுத்துக் கொள்ளும் காலமாகிறது. இதனால் மழை நீர் பூமியில் செல்வது தடுக்கப்படுகிறது. நீர் பிரச்சனை ஏற்படுகிறது, காவாய்களையும், நீர் ஓடைகளையும், பிளாஸ்டிக் பைகள் அடைத்து கொண்டு சுகாதார கேடு ஏற்படுத்தி ஜீவராசிகளுக்கு சங்கடங்களை உருவாக்கி கொண்டிருக்கிறது என்ற தன்மையில் பேசப்பட்டது.

     மேலும் மாணவர்கள் கழிவுகளை எப்படி கழிவில் இருந்து செல்வமாக மாற்றுவது என்பதை பற்றியும் விளக்கப்பட்டது. முகாம் பள்ளியின் தாளாளர் கல்வியாளர் அருண், பள்ளியின் தலைமை ஆசிரியர் தீபா, மாணவர்களை அமர வைத்து ஏற்பாடு செய்தனர். ஆசிரியர்களும் முகாமில் பயிற்சியில் பங்கேற்று சிறப்பு செய்தனர்.

     மேற்கண்ட பயிற்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் வேலூர் மாவட்டம் கே.விஸ்வநாதன் பயிற்சி அளித்தார். இறுதியில் நன்றி கூறி முகாம் முடிந்தது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.