• வேலூர் ஆவின் குளிரூட்டும் நிலையம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.
· வேலூர் ஆவின் குளிரூட்டும் நிலையம் - வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத்கண்ணா ஆய்வு.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத்கண்ணா ஆய்வு செய்தார். அப்போது அவர் பால் உற்பத்தி செய்து பேக்கிங்க் செய்யபடும் இயந்திரத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பால் வாகனங்களில் ஏற்றி அனுப்புவதையும், மேலும் நெய் தயாரிக்கும் மையத்தினையும் ஆய்வு செய்தார்.
சில நாட்களாக ஆவின் பால் கெட்டுப் போவதாக நுகர்வோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த திடீர் ஆய்வை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வின்போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Comments
Post a Comment