• வேலூர் மாவட்ட பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி மேளா.

·        வேலூர் மாவட்ட பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா (PMNAM) வருகிற 20.07.2026  அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்.

                வேலூர் மாவட்டம், வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் மேளா (PMNAM) - 2026, மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 20.07.2026 அன்று காலை 9.00 மணி முதல் மாலை  4.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் பொது துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்பிடவுள்ளனர்.

                என்.சி.வி.டி. மற்றும் எஸ்.சி.வி.டி முறையில் அரசு மற்றும் தனியார்  ஐ.டி.ஐ.-யில்  2024-ம்  ஆண்டு தேர்ச்சி பெற்ற, அல்லது 2025-ம்  ஆண்டிற்கு முன்னதாக தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் தொழிற்பழகுநராக இந்த பயிற்சியில் சேரலாம்.

                 ஐ.டி.ஐ.-யில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத 8,10,12–ம் வகுப்பு, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் Fresher Apprentice-ஆக சேர்ந்து  3 முதல்  6 மாத கால அடிப்படை பயிற்சியும் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

         தொழிற்பழகுநர் பயிற்சிக்கு பின் DGT (Director General Training) –ஆல் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் தொழிற்பழகுநர் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படுகிறது.  மேலும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது.

         தொழிற்பழகுநர் பயிற்சியின்போது மாதம் ரூ9,600 முதல் ரூ12,000 வரை நிறுவனத்தால் ஊக்கதொகை வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இம்முகாமிற்கு வருகை புரியும் மாணவ / மாணவியர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற Portal –லில் பதிவு செய்து அதன் விவரத்தினையும் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களும் எடுத்து வருமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.