• வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் -
- வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சி தலைவர்.
தொழிற் கல்வி பெறுவதற்காக வேலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இணையதளம் மூலமாக நேரடி சேர்க்கை 01.07.2026 முதல் 31.07.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழிற் பயிற்சி நிலையத்திலேயே விண்ணப்பித்து சேர்க்கை உறுதி செய்து கொள்ளலாம். கீழ்கண்ட தொழிற் பிரிவுகளில் மட்டுமே காலியிடம் உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2026.
கீழ்க்காணும் தொழிற் பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 10 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1. TURNER - 22 Seats Vacant
2. MACHINIST – 06 Seats Vacant
3. DRAUGHTS’MAN ( CIVIL) - 04 Vacant
4. MANUFACTURING PROCESS CONTROL AND AUTOMATION - 24 Seats Vacant
5. INDUSTRIAL ROBOTICS AND DIGITAL MANUFACTURING – 23 Seats Vacant
6. BASIC DESIGNER AND VIRTUAL VERIFIER (MECHANICAL) – 3 Seats Vacant
கீழ்க்காணும் தொழிற் பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 8 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. LEATHER GOODS MAKER.( Physically challenged) - 8 Seats Vacant
14 வயது முதல் 40 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. இப்பயிற்சி நிலையத்தில் Industry 4.0 நிறுவனத்துடன் சேர்ந்து பயிற்சியாளர்களுக்கு Advanced Training வழங்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 50/- மட்டும் Debit card/ Credit card/ Net Banking/ G-PAY/ Phone pay மூலம் செலுத்த வேண்டும்.
பயிற்சிக் கட்டணம் இல்லை. பயிற்சியாளர்கள் அனைவருக்கும் உதவித்தொகை மாதம் ரூ.750/- வழங்கப்படும். மேலும் விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகம், சீருடை, காலணிகள், வரைபடக்கருவிகள், இலவச பேருந்து சீட்டு ஆகியன வழங்கப்படும், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000/- பெற்று தரப்படும். உறுதியான, வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.
தொலைபேசி : 0416 – 2290848 email : veliti510@yahoo.co.in
Comments
Post a Comment