• வேலூரில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம் .
· வேலூரில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம் .
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாநில துணை பொதுசெயலாளர் ஜோஷி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட தலைவர் ரமேஷ் துவங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் தீனா, சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
17-வது சட்டமன்ற பொது தேர்தல் பணிகளில் வருவாய் துறை ஊழியர்கள் மேற்கொண்ட செல்வீனங்களுக்கான தொகையை தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களாகியும் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் செல்வீன நிதியை உடனே வழங்க வேண்டும். சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாட்களில் ஆய்வு கூட்டங்கள் அரசு நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
நீண்ட காலமாக வருவாய் துறையில் காலியாக உள்ள 3000-கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிப்காட் டாஸ்மாக், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பணிகளில் உள்ள பிரச்சனைகள் அமைச்சர்களையும் உயரதிகாரிகளையும் சந்தித்து எடுத்துரைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் சான்றிதழ்களில் விசாரணை கால வரம்பை குறைக்கும் செயலை கைவிட வேண்டும். வருவாய் துறை அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டமானது நடைபெற்றது. இதில் திரளான வருவாய் துறையினர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.


Comments
Post a Comment