• வேலூரில் ஊர் காவல் படையினர் போராட்டத்திற்கு செல்லாமல் தடுத்து பரேட்.

·        வேலூரில் ஊர் காவல் படையினர் போராட்டத்திற்கு செல்லாமல் தடுத்து பரேட்.          

     முறையாக ஊதியம் வழங்கபடவில்லை என சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை  ஊர்காவல் படையினர் அறிவித்தனர்.

     இந்த நிலையில் அவர்களை தடுக்கும் நோக்கில் வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள காவல் துறை பயிற்சி மைதானத்தில் அதிகாலையிலேயே அழைத்து வந்து காவலர் மைதானத்தில் அடைத்து வைத்து பரேட் பயிற்சி என கூறி போராட்டத்திற்கு செல்லாமல் தடுக்கபட்டனர்.

   ஊர் காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.560/-தான் வழங்கப்படுகிறது. அதுவும் போக்குவரத்து பணி செய்தால் ரூ.280 மட்டும் வழங்கப்படுகிறது பாண்டிச்சேரியில் ஊர் காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1500/- வழங்கப்படுகிறது. அதேபோல் இங்கு வழங்க வேண்டும். மாதத்தில் 30 நாட்களும் வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் ஊதிய உரிமை கேட்டு போராட சென்ற ஊர் காவல் படையினர் பயிற்சி என்ற பெயரில் அடைத்து வைக்கபட்டதால் செய்வதறியாது மனம் நொந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.