• வேலூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்பாட்டம்.

·         பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்து நிறுத்து. 

·         பாலியல் குற்றங்களுக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். 

·         டாஸ்மாக் மதுபான கடைகளை படிப்படியாக மூடி போதை கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தவும். 

·         சிங்கப்பெண் காவல் படைக்கு தனி அலுவலகம், கூடுதல் காவலர்கள், கூடுதலான அதிகாரம் வழங்க வேண்டும். 

·         வேலூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்பாட்டம்.

            வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்பாட்டமானது மாவட்ட செயலாளர் காவேரி தலைமையில் நடைபெற்றது. இதனை முன்னாள் சட்ட பேரவை உறுப்பினர் லதா துவங்கி வைத்தார்.

     இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்குகளை தனி நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து விரைவான நீதியை உறுதி செய்ய வேண்டும்.

        போதை பொருட்கள் விற்பனை, கடத்தல் மற்றும் அதன் விநியோக கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்லூரி, குடியிருப்பு பகுதிகளில் போதை பொருட்கள் பரவலை தடுக்க சிறப்பு உளவு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

        பெண்கள் பாதுகாப்பு தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்களை உடனடியாக அமைத்து மாதம்தோறும் அதன் செயல்படுகளை ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தாமதமின்றி உரிய நஷ்டயீடு, சட்ட உதவி, உளவியல் ஆலோசனை மற்றும் முறையாக மறுவாழ்வு உதவிகளை அரசு வழங்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக 50% காவலர்களை நியமனம் செய்திட வேண்டும்.

   பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்து நிறுத்து. பாலியல் குற்றங்களுக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.

     டாஸ்மாக் மதுபான கடைகளை படிப்படியாக மூடி போதை கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தவும். சிங்கப் பெண் காவல் படைக்கு தனி அலுவலகம், கூடுதல் காவலர்கள், கூடுதலான அதிகாரம் வழங்கிட வேண்டும். சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி 9 மாதங்களாக நியமிக்காததற்கு போதைப் பொருட்கள் புழக்கம்தான் என முதல்வர் கூறுகிறார்.

            தமிழ் நாடு முழுவதும் வயது, பாலினம் போன்ற வேறுபாடுகள் ஏதுமின்றி அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் போதைப் பொருட்கள் பழக்கம் வேறுன்றியுள்ளதும் - பள்ளி, கல்லூரி பயிலும் இளம் தலைமுறையினர் போதையின் பிடியில் சிக்கியுள்ளார்கள். தமிழ்நாட்டில் 23.5.% ஆண்கள் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக மத்திய அரசு கணக்கு சொல்லுகிறது. இதன் தொடர்ச்சியாக வன்முறை பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. போதைப் பொருட்கள் புழக்கமும், சட்டவிரோத மது விற்பனையும் அரசுக்கும், காவல் துறைக்கும் தெரியாமல் நடப்பதில்லை. அதிகார வர்க்கத்தின் மெத்தனமும், கண்டு கொள்ளாத போக்குமே பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம். இதனை தடுக்க தமிழக அரசு கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும்.

     தமிழ்நாட்டில் கோவை, ஓசூர், விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, துத்துக்குடி, தாராபுரம், நாங்குநேரி, கடலூர், மதுரை, சென்னை, சிவகங்கை என பல இடங்களில் 3 வயது குழந்தைகள் முதல் 60 வயது வண்கள் மீது நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் .வெ.. அரசு ஆட்சி துவங்கிய நாள் முதல் பத்திரிக்கைகளில் வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளதை நாம் அறிவோம். இத்தகைய பாலியல் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான பாலியில் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த .வெ.. அரசு சட்ட மன்றத்திலும் பேச வேண்டும். மக்கள் மன்றத்திலும் பேச வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலிவுறுத்துகிறது.

     இந்த கொடுமைகள் தொடர்பாக தமிழக முதலவர் சிங்கப்பெண் (படை) அமைத்து விட்டு ஏதுமே பேசாமலேயே கடந்து போகும் நடவடிக்கைகள் குற்றவாளிகளுக்கு ஆதரவான சமிக்சையாக மாறிப்போய்விடும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். ஏனென்றால் குற்றம் செய்பவர்கள் சட்டமன்ற உறுப்பினர் முதற்கொண்டு குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளின் பின்னணியில் அதிர்ச்சிகரமான செய்திகள் இவைகளை தடுத்திட தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை புலப்படுத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

          பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் 22.05.2012-ல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டப்படி 2024-ல் பதிவு செய்யப்பட்ட 69191 வழக்குகளில் 19% மட்டுமே இதுவரை தண்டனை பெற்று வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் 20 மாவட்டங்களில் மட்டுமே போக்சோ விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இது அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி பணியாளர்கள் மற்றும் நீதிபதி நியமனங்கள் காலியாக இல்லமல் நிரப்பப்பட்டு விரைவாக குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வகையில் போக்சோ சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு வலுப்படுத்த வேண்டும்.

            சிங்கப்பெண் படைக்கு கூடுதலாக அலுவலகம், காவலர்கள் நியமனங்கள் செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலின் 2025-ல் சென்னை 20-ம் இடத்தை பெற்றிருந்தது.

            தற்போதைய நிலவரம் கலவராமாகி உள்ளது என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகின்றோம். உதாரணமாக குடியாத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரம்மாஸ் தனியார் பள்ளியை எதிர்த்து போராடியவர்கள் பள்ளி பெண் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் போராட்டத்தின்போது முழக்கமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியின் பண் ஆசியர்கள் குடியாத்தம் காவல் நிலையத்தில் 01.07.2026 அன்று புகார் அளிக்கப்பட்டு 05.07.2026 அன்று சி.எஸ்.ஆர். எண் 0526/2026 என பதிவு செய்யப்பட்ட பிறகும் 10-நாட்களாக தமிழக அரசின் குடியாத்தம் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும். அதே நேரத்தில் பெண் ஆசிரியர்களை அவதூராக முழக்கமிட்டபோது குடியாத்தம் சிங்கப்பெண் காவல் படை எங்கே சென்றது என்பதும் கேள்வி குறியாகும்.

     எனவே தமிழக அரசு விரைந்து சட்டரீதியான நடவடிக்கைகள் மூலமாக தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களை தடுத்து நிறுத்திட வேண்டுமென கோரி கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.