• அணைக்கட்டு பள்ளி மாணவர்களுக்கான புகையிலை பாதிப்புகள்
· அணைக்கட்டு பள்ளி மாணவர்களுக்கான புகையிலை பாதிப்புகள் - விரிவான பட விளக்கங்களுடன் உரையாடல்.
· Tobacco Monitor Field Investigator பயிற்சி.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம், ஒடுகத்தூர் பகுதியில் இயங்கி வரும் ஆக்ஸ்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி விரிவான பட விளக்கங்களுடன் உரையாடல் மூலம் விளக்கப்பட்டது.
மாணவர்கள் பீடி, சிகரெட், பான்பராக், ஆன்ஸ், ஸ்கூல் லீப், போதை மிட்டாய், செர்ரி பழமிட்டாய், சிகரெட் போன்ற போதைப் பொருள்களை பயன்படுத்துவதினால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றியும், மேலும் second hand smoke, third hand smoke போன்றவற்றைக் கூறி இதனால் ஏற்படும் பாதிப்புகளான மூச்சுத் திணறல், காய்ச்சல், ஆஸ்மா, வளர்ச்சி குறைவு, குழந்தை எடை குறைவு, மூளை வளர்ச்சி குறைவு, அறிவு வளர்ச்சி குறைவு, புற்றுநோய், மாரடைப்பு, கண் எரிச்சல், தொண்டை எரிச்சல், குழந்தை பிறந்தவுடன் மரணம், ஆக்ரோஷம் குணம் போன்ற வியாதிகள் மனிதனை தாக்கும். படிக்கின்ற குழந்தைகளையும் விட்டு வைக்காமல் சிசுக்கள் உட்பட பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கி கூறப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 55 ஆயிரம் மாணவர்கள் புதியதாக புகையிலை பொருள்களுக்கு அடிமை ஆவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. எனவே போதை தேசமாகும் இந்தியாவை, போதை தேசமாகும் தமிழகத்தை தடுத்து நிறுத்துவதற்கு மாணவர்கள் எப்படி எல்லாம் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். ஒழுக்கத்துடன் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று கூறப்பட்டது.
எய்ட்ஸ்சை விட கொடுமையானது போதைப் பொருள்கள் என்பதை விளக்கமாக கூறப்பட்டது. பகுத்தறிவு என்பது ஆன்மீகத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை. ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்த வேண்டும். மது அருந்தினால் ஆனந்தம். புகைப்பிடித்தால் சுகமோ சுகம். மதுவும் புகையிலை பயன்படுத்தினால் நிம்மதி என்று சொல்வதெல்லாம் மூடநம்பிக்கை என்பதை விளக்கமாக மாணவர்களிடத்தில் கூறப்பட்டது. புகையிலை பொருள்கள் மாணவர்களை சீரழித்து மாணவர்களின் வளர்ச்சியை சீரழித்து வருகிறது என்பதை விளக்கப்பட்டது.
எனவே மகிழ்ச்சியாக விளையாடி சந்தோஷமாக படித்து சாதிக்க வேண்டிய பருவத்தில் உடலை மனதை சீரழிக்கும் கொடிய அரக்கன் என்ற புகையிலை பொருள்களை, போதை வஸ்துக்களை மாணவர்கள் தொட்டு பார்க்க கூடாது என்பதையும் விளக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக மாணவர்களின் எதிர்கால கனவுகளை மொத்தமாக சீரழிக்கும் போதை வஸ்துக்களை மாணவர்கள் பயன்படுத்த கூடாது என்று விளக்கப்பட்டது. புகையிலை தாவரங்களில் இயற்கையாக காணப்படும் ஒரு சக்தி வாய்ந்த அடிமையாக்கும் நிக்கோட்டின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதுதான் இன்ப அதிர்ச்சியை உருவாக்கி பிபி., இதயத்துடிப்பை அதிகரித்து புற்றுநோயை உருவாக்கி விடுகிறது என்று விளக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது.
இறுதியாக புகையிலை மீது நீ பற்று வைத்தால் உன் உடலில் புற்று வைத்து விடும். இது போன்ற ஸ்லோகங்களை மாணவர்களை சொல்ல வைத்து இறுதியாக புகையிலைப் பொருள்கள் தானும் பயன்படுத்தாமல் தன் வீட்டிலும் உள்ளவர்களும் பயன்படுத்தாமல் சமூகத்திலும் எல்லோரும் பயன்படுத்தாமல் ஒவ்வொரு மாணவனும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டது. பயிற்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் மற்றும் Tobacco Monitor National Tobacco Control Program (NTCP) கே.விஸ்வநாதன் Tobacco Monitor Field Investigator வேலூர் மாவட்டம் முழுமையான பயிற்சி அளித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு ஆக்ஸ்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் கல்வியாளர் அருண் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வும் கொடுத்தார். பள்ளி ஆசிரியர்களையும் பயிற்சியில் பங்கேற்க வைத்தார்.

Comments
Post a Comment