• மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் “விழுதுகள்”.
- மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் “விழுதுகள்”.
“விழுதுகள்” உங்கள் ஊருக்கு அருகிலேயே உள்ளது!
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகளும், அரசு நலத்திட்ட உதவிகளும் இப்போது ஒரே இடத்தில் கிடைக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம்தான் "விழுதுகள்" மையம்.
மாற்று திறனாளிகள் நலத்துறை, உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
21 வகையான மாற்று திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை எளிதாகப் பெற இந்த திட்டம் உதவுகிறது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில், வருவாய் கோட்ட அளவில்
1.அரசு பெண்ட்லேண்ட மருத்துவமனை, வேலூர்.
2. அரசு தாலுக்கா மருத்துவமனை, பேர்ணாம்பட்டு
ஆக மொத்தம் 02 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் இம்மையங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
மேலும், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள 08 வட்டார அளவில்
1. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊசூர்,
2. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கணியம்பாடி,
3. வறுமை ஓழிப்பு சங்க கட்டிடம், வடுகந்தாங்கல்,
4. அரசு தாலுக்கா மருத்துவமனை, அணைக்கட்டு,
5. அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், காட்பாடி
6.அரசுஆரம்ப சுகாதார நிலையம், பொன்னை,
7. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேல்பட்டி,
8. அரசு தலைமை மருத்துவமனை குடியாத்தம்
ஆகிய வட்டார அளவிலான விழுதுகள் சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு துவங்கிட தயார் நிலையில் உள்ளது.
இந்த மையங்களில் நிபுணர்களால் தரமான மறுவாழ்வு சேவைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
|
· பிசியோதெரபி, |
· ஆக்குபேஷனல் தெரபி, |
|
· பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை, |
· உளவியல் ஆலோசனை, |
|
· சிறப்புக் கல்வி, |
· கண் பரிசோதனை |
|
உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு சேவைகள் இங்கு கிடைக்க பெறவுள்ளது. |
|
இதுமட்டுமல்லாமல், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை எளிதாக ஒரே இடத்தில் பெறும் வகையில் இந்த மையங்கள் செயல்பட உள்ளன.
|
· UDID அட்டைக்கு விண்ணப்பித்தல், |
|
· பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான பயிற்சி |
|
உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு சேவைகள் இங்கு கிடைக்க பெறவுள்ளது. |
இந்த மையங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான நான்கு வகையான மறுவாழ்வு சேவைகள் அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே சம்பந்தப்பட்ட சிறப்பு நிபுணர்களால் வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக, 100-க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, அவர்களின் தேவைகளை கண்டறிந்து, தேவையான மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படவுள்ளது.
கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் வாழும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் தரமான மறுவாழ்வு சேவைகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதே தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் தகவல்களுக்கு, உங்கள் அருகிலுள்ள மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம் அல்லது விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை அணுகுங்கள் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
இலவச உதவி எண்: 1800 4250 111
சைகை மொழியில் தொடர்பு கொள்ள (WhatsApp): 9498345350
Comments
Post a Comment