• வேலூர் மலைக்குறவன் ஜாதி சான்றிதழ் கோரி மக்கள் மனு.
· வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மலைக்குறவன் ஜாதி சான்றிதழ் கோரி கிராம மக்கள் நேரில் மனு.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சஞ்சீவிராயபுரம் மற்றும் கிராம மக்கள் பள்ளி மாணவர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
இவர்கள் துத்திப்பட்டு, காட்பாடி, வசந்தபுரம், விரிஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரக்கோணம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் இந்து மலை குறவர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.
ஆனால் வருவாய் துறையினர் சிலருக்கு மட்டும் இந்து மலை குறவன் (எஸ்.டி) சான்றிதழ் வழங்கி விட்டு மற்றவர்களுக்கு ஜாதி சான்றிதழ் குறவர் (எஸ்.சி) சான்று வழங்குகின்றனர். எங்களுக்கு இந்து மலை குறவன் (எஸ்.டி) என சான்று வழங்க சான்று வழங்க வேண்டுமெனவும் இதனால் கல்வி வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுவதாகவும் கிராம மக்கள் மனு அளித்தனர்.
தமிழக அரசு உடனே எங்களுக்கு தாமதமின்றி இந்து மலைகுறவன் சான்றிதழ் வழங்கினால் படிக்கவும் வேலைவாய்ப்பு பெறவும் ஏதுவாக இருக்கும் என மனு அளித்தனர்.


Comments
Post a Comment