• வேலூரில் காமராஜர் பிறந்த நாள் விழா.
· வேலூரில் காமராஜர் பிறந்த நாள் விழா.
· முன்னாள் பெருந்தலைவர் சி.கே.தேவேந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட காங்கிரஸார் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட துணை தலைவரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான சந்திரபிரகாஷ் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா வேலூரில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெயபிரகாஷ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த விழாவில் வேலூர் மாவட்ட பொருளாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான சி.கே.தேவேந்திரன் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுது பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாநில செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தார்.
முன்னதாக சி.கே.தேவேந்திரன், காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய பிரிவு தலைவர் கோரந்தாங்கல் சேகர், நிர்வாகிகள் ஜேசிகுமார், ஜேம்ஸ் உட்பட நிர்வாகிகள் பொதுமக்கள் திரளானோர் பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment