• வேலூர் மாவட்டத்தில் புதிய கட்டடங்களை அமைச்சர் திறப்பு.

·        வேலூர் மாவட்டத்தில் ரூ.5.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 23 வகுப்பறை கட்டடங்கள், ரூ.44 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் நூலக கட்டடங்கள் மற்றும் ரூ.49 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்களை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தில் ரூ.5.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 23 வகுப்பறை கட்டடங்கள், ரூ.44 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் நூலக கட்டடங்கள் மற்றும் ரூ.49 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்களை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி, திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய வட்டாரங்களில் 3 பள்ளிகளில் ரூ.5.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  23  வகுப்பறை  கட்டடங்கள் விவரம்

1.        காட்பாடி வட்டம், காட்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 வகுப்பறை கட்டடம் விவரம்

காட்படி வட்டம், காட்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.141.36 இலட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இந்த வகுப்பறைகள் தரைதளத்தில் 180.51 சதுர மீட்டர் பரப்பளவில்  2 வகுப்பறைகளும், முதல்தளத்தில் 176.13 சதுர மீட்டர் பரப்பளவில்  2 வகுப்பறைகளும், இரண்டாம்தளத்தில் 176.13 சதுர மீட்டர் பரப்பளவில்  2 வகுப்பறைகளும் என மொத்தம்  6 வகுப்பறைகள்  532.77 சதுர மீட்டர் பரப்பளவில்  கட்டடப்பட்டுள்ளது.  இப்பள்ளியில் ஏற்கனவே  19 வகுப்பறைகள் உள்ளன. தற்பொது 6 வகுப்பறைகளுடன்  மொத்தம் 25 வகுப்பறைகள் உள்ளது.

2.      அணைக்கட்டு வட்டாரம், பென்னாத்தூர்  அரசு மேல்நிலைப்பள்ளியில் 15 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் மற்றும் மின்வசதிகளுடன்கூடிய  கட்டடம் விவரம்

வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 15 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் மற்றும் மின்வசதிகளுடன்கூடிய கட்டிடம் கட்ட ரூ.414.80 இலட்சம் அனுமதி வழங்கப்பட்டது.

12 வகுப்பறைகள்  கட்டிடம் விவரம்-

தரைத்தளத்தில் 298.30 சதுர மீட்டர் பரப்பளவில்  4 வகுப்பறைகள், முதல்தளத்தில் 298.30 சதுர மீட்டர் பரப்பளவில்  4 வகுப்பறைகள், இரண்டாம் தளத்தில் 298.30 சதுர மீட்டர் பரப்பளவில்  4 வகுப்பறைகள், 42.50 சதுர மீட்டர் பரப்பளவில் மேல்அறையும், 16 சதுர மீட்டர் பரப்பளவில் முன்புறமண்டபமும் என மொத்தம் 953.40 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடப்பட்டுள்ளது.

3 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் விவரம்

            தரைத்தளத்தில் 298.30 சதுர மீட்டர் பரப்பளவில்  1 ஆய்வகம், 1 வகுப்பறை, முதல்தளத்தில் 298.30 சதுர மீட்டர் பரப்பளவில்  1 ஆய்வகம், 1 வகுப்பறை,, இரண்டாம் தளத்தில் 298.30 சதுர மீட்டர் பரப்பளவில்  1 ஆய்வகம், 1 வகுப்பறை,, 42.50 சதுர மீட்டர் பரப்பளவில் மேல்அறையும், 16 சதுர மீட்டர் பரப்பளவில் முன்புறமண்டபமும் என மொத்தம் 953.40 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடப்பட்டுள்ளது

3.      குடியாத்தம்  ஊராட்சி ஒன்றியம்,  கீழ்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2 வகுப்பறை விவரம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், கீழ்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் CFSIDS திட்டத்தின்கீழ் ரூ.36 இலட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

இப்பள்ளி கட்டிடம் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளுடனும்கூடிய கல்விச் சூழலை வழங்குவதற்காக அமைக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கல்வி வசதிகள் அவசியமாகியுள்ளன. இக்கட்டிடம் மூலம் மாணவர்கள் இடவசதி குறைபாடின்றி கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படுவதுடன், கல்வித்தரம் மேம்பட்டு, பள்ளி இடைநிற்றல் குறையும். மேலும்,கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கி, அவர்களின் அறிவாற்றல் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு இக்கட்டிடம் பெரிதும் பயனளிக்கும்.

கீ.வ.குப்பம் வட்டாரத்தில்  2 கூடுதல் நூலக கட்டடங்கள்  விவரம்

            வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் காவனூர், பசுமாத்தூர் ஆகிய 2 ஊராட்சியில்  பொது நூலகங்கள் கட்டுவதற்கான சிறப்பு நிதியுதவியின்கீழ் தலா ரூ.22 இலட்சம் மதிப்பில் 2 கூடுதல்  நூலக கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

                பொதுமக்களின் கல்வி, அறிவு மற்றும் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் அனைவரும் எளிதில் அணுகக்கூடிய நவீன வசதிகளுடன்கூடிய கூடுதல் பொது நூலக கட்டிடம் அமைப்பது அவசியமாகிறது. இக்கட்டிடம் மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அமைதியான சூழலில் நூல்கள் வாசித்தல், தகவல்களை பெறுதல் மற்றும் அறிவை வளர்த்துக்கொள்ள பயன்படும். மேலும், அதிகளவிலான வாசகர்களுக்கு தரமான நூலகச்  சேவையை வழங்க இக்கூடுதல் கட்டிடம் இன்றியமையாததாகும்.

கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி, வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம்,  காவனூர் ஊராட்சியில் பொது நூலகங்கள் கட்டுவதற்கான சிறப்பு நிதியுதவியின்கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் நூலக கட்டடத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வின்போது கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் நூலகரிடம்  நூலகத்தை மாணவர்கள், போட்டி தேர்வுக்கு தயராகும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்  பயன்படுத்தும் வகையில்  3 மாதத்திற்கு ஒருமுறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தமாறு அறிவுறுத்தினார்.

காட்பாடி, கீ.வ.குப்பம், அணைக்கட்டு, ஆகிய வட்டாரங்களில் கட்டப்பட்டுள்ள  3 புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் விவரம்.

1.        காட்பாடி ஊராட்சி ஒன்றியம், தேன்பள்ளி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் விவரம்

காட்பாடி ஊராட்சி ஒன்றியம், தேன்பள்ளி ஊராட்சியில் MGNREGS திட்டத்தின்கீழ் ரூ.16 இலட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

தேன்பள்ளி ஊராட்சியில் உள்ள 0-6 வயதுடைய குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும்  தாய்மார்களுக்கு பாதுகாப்பான சூழலில்  ஊட்டச்சத்து, முன்பள்ளிக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்க புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் அமைப்பது அவசியமாகும்.

2.      கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம், பனமடங்கி  ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் விவரம்

கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம், பனமடங்கி ஊராட்சி, பஜனை கோயில் தெருவில் Focus Block Development Program  திட்டத்தின்கீழ் ரூ.16.55 இலட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

பனமடங்கி ஊராட்சியில் உள்ள 0-6 வயதுடைய குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும்  தாய்மார்களுக்கு பாதுகாப்பான சூழலில்  ஊட்டச்சத்து, முன்பள்ளிக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்க புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் அமைப்பது அவசியமாகும்.

3.      அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், இறைவன்காடு  ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் விவரம்

கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம்,  இறைவன்காடு ஊராட்சி, காட்டுகொள்ளை கிராமத்தில் MGNREGS திட்டத்தின்கீழ் ரூ.16.45 இலட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

இறைவன்காடு ஊராட்சியில் உள்ள 0-6 வயதுடைய குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும்  தாய்மார்களுக்கு பாதுகாப்பான சூழலில்  ஊட்டச்சத்து, முன்பள்ளிக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்க புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் அமைப்பது அவசியமாகும்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர்
ம.விஜய்பாலாஜி
 தெரிவித்ததாவது.

உங்களை எல்லாம் பார்க்கும்போது என்னுடைய  பள்ளி நினைவு எங்களுக்கு திரும்ப கிடைச்ச மாதிரி ஒரு புத்துணர்ச்சி, ஒரு சந்தோஷம். உண்மையா சொல்லணும்னா, இந்த வாழ்க்கை  திரும்ப நமக்கு கிடைக்காது. இப்ப நீங்க செலவிடுகிற ஒவ்வொரு நிமிடமும் நீங்க திருப்பி கிடைக்காத அனுபவங்கள், வாய்ப்புகள், நல்ல நண்பர்கள். இங்கே உங்க பக்கத்துல அமர்ந்திருக்கிறவங்க மட்டும்தான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம, நீங்க ஏழையா, பணக்காரங்களா, என்ன ஜாதி, என்ன மதம்னு பார்க்காம, ஒரே டிபன் பாக்ஸ் வாங்கி நீங்க கொண்டு வர சாப்பாட்டை 5 பேர் பகிர்ந்து சாப்பிடக்கூடிய ஒரே இடம் இந்த பள்ளிக்கூடம்தான்.

ஏன்னா, எந்த மாணவர்களுக்கும் ஏற்றத்தாழ்வு வந்திடக் கூடாது என்கிறதுக்காகத்தான் சீருடையை ஒரே மாதிரியே எல்லாத்துக்கும் கொண்டு வந்திருக்காங்க. இங்கே நீங்க தேர்ந்தெடுக்கக்கூடிய நண்பர்கள் நிச்சயம் உங்க பழக்கவழக்கத்துக்காகத்தான் உங்களோடு பழகுறாங்களே தவிர, காசு பணத்துக்கோ, மத்த எந்த விஷயத்துக்காகவோ கிடையாது. இவங்கதான் நீண்ட நாள் உங்க கூட பயணம் செய்ய போறவங்க.  எந்தவித ஏற்றதாழ்வும் இல்லாம, உங்களுக்குள்ளே மகிழ்ச்சியா இருக்க வேண்டும். நம்ம முதலமைச்சர் சொன்ன மாதிரி, கல்வி நமக்கு முக்கியம், அதைவிட முக்கியம் ஒழுக்கம். அந்த ஒழுக்கத்தை கத்துக்கிறதுதான் இந்த பள்ளிக்கூடம்.

அதே மாதிரியே, இன்னைக்கு நம்ம ஒரு தவறு பண்ணும்போது, நம்ம ஆசிரியர்கள், ஆசிரியைகள் உங்களைக் கண்டிக்கும்போது உங்களுக்கு அது வருத்தமா தெரியும். ஆனா, அது எதிர்காலத்தில் நீங்க நல்ல நிலைமைக்கு வரும்போது, கண்டிப்பா அதுக்கு முக்கிய காரணம் அவங்களாகவும் இருப்பாங்க. மாதா, பிதா, குரு, தெய்வம்னு சொல்றாங்கல்ல? அந்த குரு நம்ம அப்பா, அம்மாவுக்குச் சமம். நம்ம தாய், தந்தையை எந்த அளவுக்கு நம்ம மதிக்கிறோமோ, அதே அளவுக்கு நமக்குக் கல்வி கற்றுத்தர ஆசிரியர்களையும் நம்ம மதிக்க வேண்டும். அதை பண்ணோம்னா மட்டும்தான் நம் வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு, நல்ல நிலைமைக்குச் சென்றடைய முடியும்.

எல்லாருமே மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்.  எந்த கவலையும் படாதீங்க, எந்த மன அழுத்ததையும் வச்சுக்காதீங்க. தமிழ்நாடு முதலமைச்சர் சொல்ற மாதிரி, நூற்றுக்கணக்கான துறை இருக்கு. ஒரே துறை கிடையாது, ஏதோ ஒரு இடத்துல ஒரு வேலைவாய்ப்பு இருக்குது. அதனால எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க.

தமிழ்நாடு அரசு நிச்சயம் குழந்தைகளுக்கான கல்வி, அவங்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி அளிக்கும். கண்டிப்பா உங்களோட எதிர்காலம் நல்லா இருக்கும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உங்க கல்விக்காகத்தான் முன்னுரிமை, முக்கியத்துவம் எல்லாமே தராரு. நிச்சயம் உங்க எல்லாத்துக்கும் நல்லதே  நடக்கும் என மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி, தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மரு.ம.சுதாகர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம.வினோத்கண்ணன்,  அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் த.வேலழகன், கீ.வ.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.தென்றல்குமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்  க.சிந்து,  காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வே.வேல்முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ச.சுடலைமுத்து, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி மு.சாந்தி பிரியதரிசினி, மாவட்ட உடற்கல்வி அசிரியர் பி.சரஸ்வதி,  பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.சரளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.