• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.
· வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்
· நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீபாராதனை
· உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் முற்றோதல்
வேலூர், கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு தேன், அரிசி மாவு, பால், தயிர், விபூதி, கரும்பு சாறு, சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்களை செய்து இறுதியாக கலசாபிஷேகம் செய்தனர்.
பின்னர் மலர் மாலைகள், வில்வ இலை மாலைகள், அருகம்புல் தாமரை மலர்களால் நந்திக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து தட்டு ஆரத்தி, கும்ப ஆரத்திகளை செய்து இறுதியாக மகாதீபாராதனைகள் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா முழக்கங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி ஜலண்டீஸ்வரர் அலங்காரங்கள் செய்து திருஊடல் வாத்தியங்கள் முழங்கிட பக்தர்கள் புடை சூழ உட்பிரகார உலாவும் நடைபெற்றது. ஆலயத்தில் உலக அமைதிக்காகவும் மழை வேண்டியும் மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி தேவார திருவாச முற்றோதல் நடைபெற்றது.

Comments
Post a Comment