டாக்டர் சிவக்குமார் கிளினிக் தலைசுற்றல், மயக்கத்திற்கு நவீன சிகிச்சை மையம்
· இ.என்.டி. டாக்டர் சிவக்குமார் கிளினிக்கில் தலைசுற்றல், மயக்கத்திற்கு நவீன சிகிச்சை மையம் - யாகரிஷி வராஹ குருஜி திறந்து வைத்தார்.
வேலூர், ஆபீசர்ஸ் லைன், கிருஷ்ணா நகரில், இ.என்.டி கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர். எ.சிவகுமார். காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணரான இவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ துறையில் அனுபவம் பெற்றவர்.
வேலூர், சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு தலைவராகவும், மருத்துவ கண்காணிப்பாளராகவும், மருத்துவ கல்லூரி முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இதுதவிர சர்வதேச அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரியில் ஃபெலோஷிப்பாக உள்ளார்.
காது, மூக்கு, தொண்டை மருத்துவ சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் சிவக்குமார், தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு உலக தரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில், நவீன உபகரணங்களுடன் தனது கிளினிக்கை விரிவுபடுத்தி உள்ளார்.
இதன் துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிகொண்டா அருகே உள்ள ஸ்ரிஸ்தலம் ஸ்ரீ வாராஹி ஷேத்திரத்தை சிருஷ்டித்த யாகரிஷி ஸ்ரீ வராஹ குருஜி கலந்து கொண்டு சிறப்பு யாகம் செய்து நவீன சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
திறப்பு விழாவுக்கு வந்தவர்களை டாக்டர்கள் சிவகுமார், நிவேதிதா சிவகுமார், விஷ்ணு, கிருத்திகா விஷ்ணு ஆகியோர் வரவேற்றனர்.
இதுகுறித்து டாக்டர் எ.சிவகுமார் கூறுகையில், காது, மூக்கு, தொண்டை மற்றும் தலைசுற்றல், மயக்கம், தள்ளாடுதல் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு வேலூர் மாவட்டத்திலேயே முதன் முறையாக உலக தரத்தில் நவீன கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக நவீன ரக கருவிகள் கிளினிக்கில் பொருத்தப்பட்டுள்ளது. எங்களை நாடி வரும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து அவர்களை முழுமையாக குணப்படுத்தி அனுப்புவது எங்களது நோக்கம்.
இந்த மையத்தின் மூலம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சித்தூர் மாவட்ட மக்கள் குறைந்த செலவில் நிறைவான சிகிச்சை பெற முடியும். எங்களது சிகிச்சை மையம் தினமும் பிற்பகல் இயங்குகிறது. இனிவரும் காலங்களில் வெளியூரில் இருந்து வரும் நோயாளிகளுக்காக தினமும் காலையும், மாலையும் சிகிச்சை மையம் இயங்கும்.
இவ்வாறு டாக்டர் சிவகுமார் கூறினார்.
நிகழ்ச்சியில் டாக்டர்கள் அருணன், பரணி, டி.நந்தகுமார், ராமரத்தினம், அருளாளன், செந்தாமரை கண்ணன், குமரேசன், காளிதாஸ், சுபபிரியா, த.வெ.க., வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment