• வேலூர் மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகம் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு.

 ·        நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் வேலூர்   மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங்பேடி வேலூர்   மாநகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் குழாய் பாலம் அமைக்கும் பணி, பயோமைனிங் முறையில் குப்பைகளை அகற்றும் பணி, திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் வேலூர் மாநகராட்சி, சர்க்கார்தோப்பு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, காகிதப்பட்டறை முதல் விருதம்பட்டு வரை கழிவுநீர் குழாய் எடுத்து செல்வதற்கான பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி, காகிதப்பட்டறை பாலாற்றங்கரையில் உள்ள குப்பைகளை பயோமைனிங் முறையில் அகற்றம் செய்திடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், வேலூர் மாநகராட்சி, காகிதப்பட்டறை பாலாற்றங்கரையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில்  குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணிகளைப்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தூய்மை பணியாளர்களிடம்  முகக் கவசம், கையுறை  மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்  முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்தகுமார், கூடுதல் இயக்குநர் நகராட்சி நிர்வாகம் விஜய்குமார்,  மாநகராட்சி  கண்காணிப்பு பொறியாளர் சி.கண்ணன், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.