• நீர்வள துறை வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு.

  • நீர்வள துறை மற்றும் நெடுஞ்சாலை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள்  குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

 

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் நீர்வளத்துறையின் சார்பில்  கழிஞ்சூர் ஏரி, தாராபடவேடு ஏரி, வெள்ளச்சேதம் தடுப்பு பணிகள், நெடுஞ்சாலை துறையின் சார்பில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள், பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் குறித்து  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ள இரட்டை ஏரிகளான  கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரியை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து  காட்பாடி வட்டம், காட்பாடி நகரத்தில் உள்ள பாரதிநகர் மற்றும் வி.ஜி ராவ் நகர் பகுதியில் வெள்ள சேதத்தை தவிர்க்க பாண்டியன் மடுவு கால்வாய் தொலைக்கல் 21955மீ முதல் 22665 மீ வரை  ரூ.7 கோடி மதிப்பில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாண்டியன் மடுவு கால்வாயானது காவனூர் ஏரியின் உபரி நீர் கால்வாயில் ஆரம்பமாகி 18.25 கி.மீட்டர் பயணித்து காட்பாடி வட்டத்தில் உள்ள கழிஞ்சூர் ஏரியில் கலக்கின்றது. பாண்டியன் மடுவு கால்வாயின் 710 மீட்டர் நீளத்திற்கு தூர் வாரி வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ளது. இந்த வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுவதின் மூலம் பாண்டியன் மடுவு கால்வாயில் வெள்ளநீர் சீராக சென்று பாரதி நகர், வி.ஜி.ராவ் நகர் பகுதிகளில் வெள்ள சேதம் ஏற்படுவதை தவிர்க்கப்படுகிறது. பாண்டியன் மடுவு கால்வாயின் மூலம் பாசனம் மேற்கொள்ளப்படும் விவசாயிகளின் பாசனங்கள் உறுதி செய்யப்படுகிறது.

அதனை தொடர்ந்து  காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் உபரிநீர் கால்வாய் முதல் தாராபடவேடு உபரிநீர் கால்வாய் வரை ரூ.3.90 கோடி மதிப்பில்  மாற்று பாதையில் கழிவுநீரை கொண்டு கான்கிரீட்டால் மூடு கால்வாய் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சி தலைவர் தாராபடவேடு கஸ்தூரி பாய் நகர் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கழிவுநீர் தாராபடவேடு ஏரிக்கு செல்லாத வகையில் கான்கீரிட் மூடு கால்வாய் மூலம் வேலூர்-காட்பாடி சாலை வரை தனிக்கால்வாய் அமைத்து கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படும். இப்பணி மூலம் தாராபடவேடு ஏரியில் கழிவுநீர் கலக்காமல் தண்ணீர் மாசுபடுவதை தவிர்க்கப்படும். இதன் மூலம் சுமார் 8000 பொதுமக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைவார்கள்.

 

மேலும்,  காட்பாடி நகரத்தில்  வெள்ள சேதம் தவிர்க்க பாண்டியன் மடுவு கால்வாய் தொலைக்கல் 20470 மீ முதல் 21050 மீ வரை ரூ.10.00 கோடி மதிப்பில் (உபரிநீர் கலங்கள் முதல் காட்பாடி-வேலூர் பிரதான சாலை வரை) கால்வாயின் கொள்ளளவு திறன் அதிகரித்து கான்கிரீட்டால் மூடுகால்வாய் மற்றும் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கும் பணியை  மாவட்ட ஆட்சி தலைவர் மதி நகர் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாண்டியன் மடுவு கால்வாயானது காவனூர் ஏரியின் உபரிநீர் கால்வாயில் ஆரம்பமாகி 18.25 கி.மீட்டர் பயணித்து காட்பாடி வட்டத்தில் உள்ள கழிஞ்சூர் ஏரியில் கலக்கின்றது. பாண்டியன் மடுவு  கால்வாயின் 300 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரி கான்கீரிட்டால் மூடுகால்வாய் அமைத்தும் மற்றும் 200 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரி வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கப்படவும் உள்ளது. இந்த கான்கிரீட்டால் மூடு கால்வாய் மற்றும் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கபடுவதன் மூலம் பாண்டியன் மடுவு கால்வாயில் வெள்ள நீர் சீராக சென்று கழிஞ்சூர்-தாராபடவேடு உபரிநீர் கலங்கள் முதல் காட்பாடி வேலூர் பிரதான சாலை வரை உள்ள மதிநகர் பகுதிகளில் வெள்ள சேதம் ஏற்படுவதை தவிர்க்கப்படுகிறது- பாண்டியன் மடுவு கால்வாயின் மூலம் பாசனம் மேற்கொள்ளப்படும் விவசாயிகளின் பாசனங்கள் உறுதி செய்யப்படுகிறது.

தொடர்ந்து காட்பாடி காந்திநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் குடியிருப்பு பகுதிகளுக்கு கழிவுநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது  பணியை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் வேலூர் மாவட்டம், மங்களூர் – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் காட்பாடி இரயில்வே சந்திப்பு பகுதியில் உள்ள தற்போதைய 2 வழிச்சாலை ரயில்வே மேம்பாலத்துக்கு அண்மையில் கூடுதல் 2 வழிச்சாலை ரயில்வே மேம்பாலம்  ரூ.44.64 கோடி மதிப்பில்  அமைக்கும் பணியை   பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மரு.ம.சுதாகர்,  நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆர்.வெங்கடேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் வி.குமாரசாமி, உதவி செயற்பொறியாளர் பி.கோபி, மாநகர நல அலுவலர் மரு.பிரதாப் குமார்,  காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.