• காட்பாடி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் “ திட்டம் .

  • வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் 15.07.2026   மற்றும் 16.07.2026 ஆகிய நாட்களில்  உங்களைத் தேடி உங்கள் ஊரில்திட்டம்  நடைபெற உள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்.

         மக்களை நாடி , மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்என்ற திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

        உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்” (UTUO)படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று தமிழக முதலமைச்சர்-ஆல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

         வேலூர் மாவட்டத்தில் காட்பாடி வட்டத்தில் 15.07.2026 புதன்கிழமை மற்றும் 16.07.2026 வியாழகிழமை அன்றுஉங்களை தேடி,உங்கள் ஊரில்திட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. அச்சமயம் மாவட்ட ஆட்சி தலைவர் காட்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளார்கள்.

 மேலும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் இவ்வட்டத்திற்குட்பட்ட அரசு திட்டப்பணிகள், அரசு சேவைகள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு விடுதிகள், நியாய விலைக் கடைகள், பள்ளிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். எனவே , மேற்படி சிறப்பான திட்டத்தில் பொதுமக்கள் 15.07.2026 அன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கைகளை        மனுக்களாக அளித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.