• கிருஷ்ணசாமி சீனியர் செகண்டரி பள்ளி இன்ட்ராக்ட் சங்கம்.
· கிருஷ்ணசாமி சீனியர் செகண்டரி பள்ளியில் இன்ட்ராக்ட் சங்கம் தொடக்க விழா - விழிப்புணர்வு ஊர்வலம்.
வேலூர், வேலூர் வள்ளல் ந. கிருஷ்ணசாமி முதலியார் சீனியர் செகண்டரி பள்ளியில் அக்கார்டு ரோட்டரி சங்கத்தின் சார்பில் இன்ட்ராக்ட் சங்கம் தொடக்க விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தாளாளரும், ரோட்டரி மாவட்ட ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ள த.சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார். பள்ளி முதல்வர் ஆர்.ஜி. சுஜாதா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் வி.சுரேஷ் கலந்து கொண்டு இன்ட்ராக்ட் சங்க நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விழாவில் அக்கார்டு ரோட்டரி சங்கத் தலைவர் சுதாகர், பள்ளி மேலாளர் துர்காதேவி மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment