• வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு வார நிறைவு விழா.

  • வேலூர்  மாவட்டத்தில் கூட்டுறவு வார நிறைவு விழா - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில்  மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் கூட்டுறவு வார நிறைவு விழா நடைபெற்றது. 

 

இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் 06.07.2021 -ஆம் தேதியன்று நிறுவப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைதை முன்னிட்டு 29.06.2026 முதல் 06.07.2026 வரை நாடு முழுவதும் கூட்டுறவு வாரம் 2026 கொண்டாட திட்டமிடப்பட்டது. 

 

கூட்டுறவு வாரம் முதல் நாளான 29.06.2026 அன்று கூட்டுறவு கொடி ஏற்றி, கூட்டுறவு உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டு கூட்டுறவு சங்கங்களில் கூட்டுறவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பள்ளி மற்றும் வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டது. 

 

கூட்டுறவு வாரம் நிறைவு விழாவில் பள்ளி மற்றும்  வேலூர் கூட்டுறவு  மேலாண்மை நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை மற்றும் வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற 36 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  வழங்கினார். 

 

மேலும், வேலூர் மாவட்டத்தில் செயல்படும் 30 சிறந்த கூட்டுறவு சங்கம், வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் சேவைகளையும், கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும்  விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள், கூட்டுறவு அலகுகளில் பணிபுரியும் 19 பணியாளர்களின் பணியினை பாராட்டி பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். 

 

முன்னதாக வேலூர் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்ற  கூட்டுறவு வார நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், மரக்கன்றை நடவு செய்தார்.

 

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சா.திருகுணஐயப்பதுரை, வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் / செயலாட்சியர் ஆ.பழனிச்சாமி, கூட்டுறவு மேலாண்மை நிலையம் முதல்வர் என்.வி.ஏழுமலை, துணை பதிவாளர்கள் தே.வெ.சுரேஷ்குப்தா, ப.வேல்முருகன், காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.