• விவசாய பம்புசெட்டுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர் அரசு கைவிட வேண்டும்.

·         தமிழகத்தில் விவசாய பம்புசெட்டுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். 

·         தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆட்சியரிடம் மனு.

        வேலூர் மாவட்டம், வேலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் உதயகுமார் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

    அதில் தற்போது தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் அதனை ரத்து செய்யும் நோக்கில் விவசாய பம்பு செட்டுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர்களை பொருத்த வேண்டுமென மின்வாரியத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை தமிழக விவசாயிகள் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் முயற்சியை கைவிட்டு தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டுமென ஆட்சியர் லீலா அலெக்சிடம் மனு அளித்தனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.