• மது போதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது.
· மது போதையில் தந்தையை கத்தியால் வெட்டிகொலை செய்த மகன் கைது
வேலூர் மாவட்டம், வேலூர், சலவன்பேட்டை, அம்மனாங்குட்டை ரோடு பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (70). இவர் தச்சு தொழிலாளி. இவரது மகன் புறா (எ) சக்திவேல் (40). இவரும் தந்தையுடன் தச்சுவேலை செய்து வருகிறார்.
தந்தை, மகன் இருவரும் மது அருந்துவது பழக்கம். இந்த நிலையில் இருவரும் மது அருந்தும்போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மது போதையில் இருந்த சக்திவேல் தந்தையை கத்தியால் வெட்டி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி அருகிலிருந்து காணாற்றின் ஓரம் படுத்து தூங்கிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த சக்திவேலை கைது செய்தனர்.
மதுபோதையில் தந்தையை மகனே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Comments
Post a Comment