• கால்நடை பராமரிப்பு கழிவு செய்யப்பட்ட வாகனம் பொது ஏலம்.

·  வேலூர் மாவட்டம், கால்நடை பராமரிப்பு துறையில், கீழ்காணும் கழிவு செய்யப்பட்ட வாகனம் 29.07.2026 அன்று பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க பொது ஏலம் விடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வாகன எண் TN 21 G 2729 (EICHER 10.50)

நிபந்தனைகள்

1)               ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் அரசு நிர்ணயித்துள்ள தொகையில் 10% முன்பிணைத் தொகை (EMD) வரைவோலை (DD) யாக / ரொக்கம் (Cash) ஆக Assistant Director of Animal Disease Intelligence Unit, Vellore அவர்களுக்கு செலுத்த வேண்டும்.

2)    குறிப்பிட்ட காலத்திற்கு பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்படமாட்டர்கள்.

 3)           ஏலத்தில் அதிகத் தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும்.

 4)           அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் இரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதியில் நடத்தப்படும்.

5)           ஏலம் எடுத்தவர் உடன் பணத்தை செலுத்தி, பின் பொருளினை எடுத்துச் செல்ல வேண்டும்.

6)           ஏலம் எடுத்தவர் தொகை செலுத்தாத பட்சத்தில் முன்பிணைத் தொகை மீள வழங்கப்படமாட்டாது.

7)            ஏலம் எடுத்தவர் நீங்கலாக மற்றவர்களின் முன்பிணைத் தொகை மீள வழங்கப்படும்.

 8)           இந்த ஏலத்தை இரத்து செய்வதற்கோ, ஏலத்தை நிறுத்தி வைக்க, எலத்தை முடித்து வைப்பதற்கு கீழ்குறிப்பிட்ட அலுவலருக்கு முழு அதிகாரம் உண்டு.

 ஏலம் எடுப்பவர் அரசு நிர்ணயித்துள்ள அடிப்படையில் GST, CST தொகையினை ஏலம் எடுப்பவர்களே செலுத்த வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.