• குடியாத்தம் பெண்கள் முன்னேற்றம் கருத்தரங்கம்.
· குடியாத்தம் பெண்கள் முன்னேற்றம் கருத்தரங்கம்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம், நடுப்பேட்டை பகுதியில் சர்வதேச மக்கள் பொதுநல மீட்பு மையம் சார்பில் பெண்கள் முன்னேற்றம் மேலும் பெண்களை ஆளுமைப்படுத்துதல் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்தில் வழக்கறிஞர்கள் விஜயகுமார், ஆனந்தராஜ், பாஸ்கர் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் ஏற்பாட்டை குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த குமாரி சதாசிவம் சிறப்பாக பெண்கள் கலந்து கொள்ள செய்தார். இதில் ஆண்களும் கலந்து கொண்டார்கள். வந்திருந்த வழக்கறிஞர்கள் எல்லாம் பல்வேறு முறைகளில் போதை ஒழிப்பை பற்றி ஐந்து நிமிடம் பேசினர். மற்றும் பெண்கள் முன்னேற்றத்தை பற்றியும் பேசினர். இறுதியாக MACT-Marry Annai Charitable, Tobacco Monitor Field Investigator T.N., K.Viswanathan புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு என்ற தலைப்பில் பல்வேறு போதைப் பொருள்களை பற்றியும் அதனுடைய தீமைகளையும், எதிர்காலத்தில் இளைஞர்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற புள்ளி விவரத்தை எடுத்துக் கூறப்பட்டது. மேலும் போதை வஸ்துகளினால் பொது இடங்களில் இரண்டாம் பட்ச புகையை புகைப்பதினால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் எப்படி முறியடிக்க வேண்டும் என்பதை பற்றியும் கூறப்பட்டது.
மேலும் கஞ்சா குறிப்பாக பயன்படுத்துவதினால் உடலில் ஏற்படும் அபாயகரமான மாற்றங்களும் உடல் உபாதைகளும் இறுதியாக இறக்கும் பொழுது மிக கொடூரமாக நோய் தாக்குதலை பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் பார்ட்டி என்று சொல்லி இளைஞர்கள் கூடும்பொழுது அங்கு ஏற்படுகின்ற சக தோழர்களின் இணைப்பினால் புதியதாக எவ்வாறு போதை பொருள்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் மிகப்பெரிய போதைப் பொருள் பயன்படுத்துகின்ற நபராக மாறி சமுதாயத்தில் சீரழிவதை பற்றி எடுத்துக் கூறப்பட்டது.
குறிப்பாக குடியாத்தம் பகுதியில் மிக அதிகமாக போதைப்பொருள் பயன்பாடு இருக்கிறது என்பதை பெண்கள் எடுத்துக் கூறினார்கள். இதைப்பற்றி தகவல் எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் விளக்கமாக கூறப்பட்டது. இளைஞர்கள் இன்றைய உரை எங்களையெல்லாம் எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சிறப்பாக இருந்தது. மேலும் இன்றைக்கு வந்த பொதுமக்களில் நான்கு கூட்டங்கள் ஏற்பாடு செய்வதாகவும் ஆங்காங்கே அதில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் வேண்டும் என்று தேதிகளை குறிப்பிட்டார்கள்.
மேலும் சர்வதேச மக்கள் பொதுநல மீட்பு மையத்தின் தலைவர் வழக்கறிஞர் அரசு, அதேபோன்று ஹைகோர்ட் வழக்கறிஞர் மேடம் பொதுமக்கள்-டம் பேசி பெண்கள் வளர்ச்சிக்கும் போதையில்லா குடியாத்தத்தை உருவாக்குவதற்கும் தமிழகத்தை உருவாக்குவதற்கும் சபதம் ஏற்போம் என்று கூறினர். மேலும் வந்திருந்த அரங்கத்தில் நிறைந்திருந்த அத்தனை பேரும் உணவுபூர்வமாக வகுப்பு இருந்தது என்று கூறி விழிப்புணர்வு பெற்று சென்றனர். இறுதியாக பெண்கள் அமைப்பில் நன்றி சொல்லி கருத்தரங்கம் முடிந்தது. இதற்கான ஏற்பாட்டை டாக்டர் தமிழரசன் மற்றும் சசிகலா கூட்டத்தை ஒருங்கிணைத்தனர்.

Comments
Post a Comment