• COFFEE WITH COLLECTOR.
· COFFEE WITH COLLECTOR நிகழ்வின் வாயிலாக அரசு மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கலந்துரையாடினார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் COFFEE WITH COLLECTOR என்ற நிகழ்வின் வாயிலாக வேலூர் வட்டம், பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின்போது மாவட்ட ஆட்சி தலைவர் மாணவ, மாணவிகளிடம் தெரிவித்ததாவது.
மாணவர்கள் போட்டி தேர்வுகளை சந்திக்க தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதனை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். தினசரி நாளிதழ்களை படிக்க வேண்டும். மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக தங்களுக்குள்ளேயே போட்டி தேர்வு நடத்தி பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கணினி பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதிக மனகுழப்பங்களை தவிர்த்து, படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்.
உங்களது வெற்றியை மட்டும் நினைத்து முயற்சியுடன் நன்கு கவனமுடன் படிக்க வேண்டும். தினசரி நூலகம் சென்று நல்ல புத்தகங்களை படிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். நீங்களே சமுதாயத்தின் எதிர்காலம் அதனால் அதிக பொறுப்பும் உங்களுக்கு உண்டு.
மாணவர்கள் தங்கள் பயிலும் 10, 11, 12 ஆகிய வகுப்புகள் பாடங்களில் கவனத்துடன் பயின்றால் மத்திய, மாநில அரசு நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகள் பங்கேற்க பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் மாணவர்களுக்கு மிகப்பெரிய சொத்து கல்வி ஒன்றுதான். நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாதவற்றை தவிர்க்க வேண்டும். உங்கள் பள்ளி அருகே போதை இல்லாத பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்று கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் உயர்நிலை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்தார்
இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, பள்ளி தலைமையாசிரியர் தமிழ்பிரியா உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments
Post a Comment