• வண்டறந்தாங்கல் ஊராட்சியில் கிராம அறிவுசார் மையம் அமைக்கும் பணி.

· காட்பாடி, வண்டறந்தாங்கல் ஊராட்சியில் ரூ.77.89 இலட்சம் மதிப்பில் கிராம அறிவுசார் மையம் அமைக்கும் பணியை நீர்வள துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். காட்பாடி வட்டம், வண்ட்றந்தாங்கல் ஊராட்சியில் ரூ.77.89 இலட்சம் மதிப்பில் கிராம அறிவுசார் மையம் அமைக்கும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அறிவுசார் மையத்தின் சிறப்பம்சங்கள் இந்த அறிவுசார் மையம் 203.90 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது . இதில் ஆண்கள் , பெண்களுக்கு தனித்தனியே கழிவறை மற்றும் சமைய ல றை க் கூடம் கட்டப்படவுள்ளது . இப்பணியானது தொடங்கப்பட்டு அடுத்த 4 மாத காலத்திற்குள் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் . இந்த அறிவுசார் மையத்தின் மூலம் வண்ட்றந்தாங்கல் , அண்ணாநகர் , வண்ட்றந்தாங்கல் காலனி , இந்திரா நகர் , பு...