Posts

• வெட்டுவானம் கிராம மக்கள் கோரிக்கை.

Image
 ·         வெட்டுவானம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் சிறிய பாலம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம்   மனு.              வேலூர் மாவட்டம் , வெட்டுவானம், அம்பேத்கர் நகர் மக்கள் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியை   சந்தித்து மனு அளித்தனர்.       அந்த மனுவில், சுமார் 2,500 குடும்பங்கள் சுற்று வட்டார கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் வெட்டுவானம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.           காரணம் நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். இதில் பல சிக்கல்கள் உள்ளது. ஆகவே சிறிய மேம்பாலம் அமை...

• வேலூர் மாவட்ட நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

·         வேலூர் மாவட்டத்தில் நாளை 29.07.2025 அன்று நடைபெறவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்   குறித்த விவரம்  வ. எண் நாள் இடம் பகுதி 1           29.07.2025 செங்குந்த முதலியார் சமுதாய கூடம் வேலூர் மாநகராட்சி மண்டலம் -2 வார்டு – 18&19 2   சமுதாய கூடம், பிள்ளையார்குப்பம் வேலூர் ஊராட்சி ஒன்றியம், பெருமுகை 3   என்.எம் திருமண மஹால்,   திருப்பாக்குட்டை ஆரிமுத்துமோட்டூர் காட்பாடி ஊராட்சி ஒன்றியம், செம்பராயநல்லூர் ஆரிமுத்துமோட்டூர் 4 ஆனந்த கஸ்தூரி மஹால், ஊனை, அணைக்கட்டு அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், ஊனை, ஊனை வாணியம்பாடி 5 வன்னியர் கல்யாணமண்டபம், சீவூர் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் 6 MDM திருமண மண்டபம், செண்ட...

• வேலூர் மாவட்ட ஆட்சிமொழி கருத்தரங்கம்.

·         வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பணியாளர்கள் ஆட்சிமொழி கருத்தரங்கத்தில் பங்கேற்று பயன் பெற மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                  தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்ட செயலாக்கம் விரைவாகவும் , முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில் ஆட்சிமொழி பயிலரங்கம் 07.08.2025, 08.08.2025 ( பிற்பகல் 3.00 மணி முடிய ) ஆகிய நாள்களிலும் , ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 08.08.2025 பிற்பகல் 3.00 மணிக்கு   வேலூர்   மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது .              பயிலரங்கத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலிருந்தும் வருகை தரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி செயலாக்கம் , அரசாணைகள் , மொழிபயிற்சி , ஆட்சிமொழி ஆய்வும் , குறைகளைவு நடவடிக்கைகளும் , மொழிபெயர்ப்பு , கலைச்சொல்லாக்கம் , அலுவலக குறிப்புகள் , வரைவுகள் , செயல்முறை ஆணைகள் தயாரித்தல் ஆகிய பயிற்சிகள் ...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

Image
·         வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 432   கோரிக்கை மனுக்களை பெற்றார்.                  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நலத்துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 432 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று தி...

• ஆடிப்பூரம் அம்மனுக்கு தீர்த்தவாரி.

Image
·         ஆடிப்பூரம் அம்மனுக்கு தீர்த்தவாரி.    ·         அம்மனுக்கு அபிஷேகம், வளையல்களால் அலங்காரம் \ ·         திரளான பக்தர்கள் தரிசனம்.             வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 19- ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.              கடைசி நாளான 10- ஆம் நாள் பிரம்மோற்சவத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் உற்சவர் சிலை மேளதாளங்கள் முழங்க ஆலய குளக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.       தொடர்ந்து அகிலாண்டீஸ்வரி அம்மன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். பின்னர் வளையல்களால் அலங்காரம் செய்து லட்சார்ச்சணை நடைபெற்று தீபாராதனைகளும் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர...

• மாணவர்கள் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்

Image
 ·         மாணவர்கள் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்     ·         பெற்றோர்கள் கூறுவதை அறிவுரையாக கருதாமல் அவர்களின் அனுபவமாக கருதி நல்லொழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் .        ·         காட்பாடி குடிமையியல் முதன்மை நீதிபதி பிரேம்ஆனந்த் பேச்சு             வேலூர் மாவட்டம் , காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கும் விழா பள்ளியின் தாளாளர் ஹரிகோபாலன் தலைமையில் நடைபெற்றது.       இதில் பள்ளி துணைதலைவர் மருத்துவர் ஜார்ஜ்அரவிந்த் , மற்றும் பள்ளி நிர்வாகி தங்கபிரகாசம் உள்ளிட்டோரும் திரளான மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.       இதில் சிறப்பு அழைப்பாளராக காட்பாடி குடிமையியல் நீதிமன்...