Posts

டாக்டர் ஐடாஸ்கடர் பிறந்தநாள் விழா - ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Image
  ·          டாக்டர் ஐடாஸ்கடர் பிறந்தநாள் விழா -   ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம்          வேலூர் சத்துவாச்சாரி சோலை அரங்கில் டாக்டர் ஐடாஸ்கடர் அன்புக்கரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் துணைத்தலைவர் A. திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது .       கூட்டத்தில் வரும் 9.12.25 செவ்வாய்க்கிழமை டாக்டர் ஐடாஸ்கடர் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் மற்றும் பல தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன .        செயலாளர் ஐடா .G. தவசீலன் வரவேற்றார் . பொருளாளர் திரு .R. தேவபிரகாசம் தீர்மானங்களை வாசித்தார் . துணைத்தலைவர் திரு .P. ரவிகுமார் நன்றி கூறினார் .

வேலூர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

Image
 

• வேலூர் தனித்துவ விவசாய அடையாள எண்.

·         வேலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெற தனித்துவ விவசாய அடையாள எண் பதிவு செய்திட வேண்டும் - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                    பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெற தனித்துவ விவசாய அடையாள எண் பதிவு செய்திட வேண்டும் . வேலூர் மாவட்டத்தில் விவசாய தனித்துவ அடையாள எண் பெறாமல் 8,753 பேர் பி . எம் கிசான் பயனாளிகள் உள்ளனர் .   இவர்கள் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் 21- வது தவணை நவம்பர் 2025- ஆம் மாதத்தில்   பெறுவதற்கு உடனடியாக தங்களது தனித்துவ விவசாய அடையாள எண் பெற வேண்டும் .   இதற்கு விவசாயிகள் தங்களது பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமோ தங்களது சிட்டா மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணுடன் சென்று உடனடியாக பதிவு செய்வதை உறுதிபட...

• வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான நிதி ஆதரவு திட்டம்.

·         வேளாண் தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களுக்கான நிதி ஆதரவு   திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். விவசாயம் மற்றும் அதன் சார்ந்த துறைகளில் உழவர்கள் எதிர் கொள்ளும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளினை வழங்கிடும் வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்க நிறுவனங்களினை (Agri-tech based Startups) அடையாளம் காணவும் , அந்நிறுவனங்களின் தொழில்நுட்பத்தினை உழவர்களிடையே அதிக அளவில் பரப்பிடவும் , மேலும் , கண்டறியப்பட்ட புத்தாக்க நிறுவனங்களின் (Startups) நிலைத்தன்மைக்காக நிதி ஆதரவு வழங்கிடும் புதிய திட்டத்தினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார்கள் . இத்திட்டத்திற்கு தமிழக அரசு மாநில நிதியிலிருந்து ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது . திட்ட   பயனாளிகள் : ·         தமிழ்நாட்டில் இயங்கும் வேளாண் சந்தைகளுக்கு உகந்தவாறு குறிப்பாக வேளாண் விளைப் பொருட்களின் மத...

• தேசிய பெண்குழந்தை தினம் - மாநில அரசு விருது.

·   பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி -24 நாளில் தேசிய பெண்குழந்தை தினத்தையொட்டி வழங்கப்படும்   மாநில அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தகவல்.                       அரசாணை எண் -185 படி   பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்க்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி -24 நாளில் தேசிய பெண்குழந்தை தினத்தையொட்டி மாநில அரசு விருது வழங்கி வருகிறது .   விருது பெற தேவையான தகுதிகள் ;   1.                                தமிழ்நாட்டில் வசிக்கும் 13 வயது முதல் 18 வயதிற்குள் இருத்தல் வேண்டும் . 2.                 ...

• வரும் 18-ம் தேதி ஜாக்டோ ஜியோ ஒரு நாள் வேலை நிறுத்தம்.

Image
 ·          வரும் 18- ம் தேதி ஜாக்டோ ஜியோ ஒரு நாள் வேலை நிறுத்தம் .      ·          பள்ளிகள் அரசு அலுவலகங்கள் இழுத்து மூடி போராட்டம் - மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் வேலூரில் பேட்டி.                 வேலூர் மாவட்டம், வேலூரில் ஜாக்டோ ஜியோவின் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் குறித்து பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.       இதில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஜனார்த்தனன் , ஜோஷி , சேகர் , பாபு , ராமமூர்த்தி , ஜோசப் அன்னய்யா உள்ளிட்ட பல்வேறு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் கலந்து கொண்டு பேசினார்.                 பின்னர் மாயவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ...