Posts

• வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநர் பயிற்சி

·         வேளாண்மை பொறியியல் துறை , உதவிசெயற்பொறியாளர் ( வே . பொ ), அரசு இயந்திர கலப்பை பணிமனை பயிற்சி மையத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து நடத்தும்  ·         வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநர் பயிற்சி (Agricultural Machinery Demonstrator) - கிராமப்புற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்                  வேளாண்மைப் பொறியியல் துறை , உதவி செயற்பொறியாளர் ( வே . பொ ), அரசு இயந்திர கலப்பை பணிமனை பயிற்சி மையத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து நடத்தும் “ வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநர் பயிற்சிக்காக (“Agricultural Machinery Demonstrator) கிராமப்புற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . மேற்படி பயிற்சிக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ள உயர்நிலைக் கல...

• வள்ளிமலையில் தைப்பூச திருவிழா.

Image
 ·          வள்ளிமலையில் தைப்பூச திருவிழா - பக்தர்கள் பால் குடங்களை எடுத்தும், காவடி எடுத்தும் நேர்த்தி கடன் .      ·          முருகருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து தீபாராதனை - திரளானோர் சாமி தரிசனம் .                  வேலூர் மாவட்டம் , வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு   ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களை செய்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாராதனைகள் நடைபெற்றது.       மேலும் பக்தர்கள் ஆண்கள், பெண்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததுடன் பால் குடங்களையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தி பக்தியுடன் முருகரை வழிபட்டனர்.  

• வேலூரில் பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி பேட்டி.

Image
 ·          மத்திய பட்ஜெட் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது –  பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி வேலூரில் பேட்டி.         வேலூர் மாவட்டம் , வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் மத்திய    பட்ஜெட் குறித்து பாஜக மாநில பொதுசெயலாளர் கார்த்தியாயினி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,       இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க பிரதமர் மோடியின் நல்லாட்சி காரணமாக மூன்றாவது முறையாக பிரதமர் ஆண்டு கொண்டுள்ளார்.   நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஒன்பதாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.       அதில் பட்ஜெட்டின் சாரம்சம் நிலையான பொருளாதாரம் 12 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையான வளர்ச்சியாகவும் உள்ளது. படெஜ்ட் வளர்ச்சி மிக்க இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பெண்களையும் இளைஞர்களை மையப்படுத்தியும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் ஆற்றல் சக்தியாக போற்ற கூடிய ...

• பிரம்மபுரம் மகா முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்.

Image
 ·          பிரம்மபுரத்தில் உள்ள   500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா முனீஸ்வரர் மற்றும் சப்தகன்னியர்கள் ஆலய மஹா கும்பாபிஷேகம் திரளானோர் பங்கேற்று தரிசனம்                 வேலூர் மாவட்டம் , காட்பாடி அருகே பிரம்மபுரம்   கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மஹா முனீஸ்வரர் மற்றும் சப்த கன்னியர்கள் ஆலய மஹா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. 28 அடி உயரத்தில் பழமையான ஸ்ரீ மஹா முனீஸ்வரர் ஆலயம் புணரமைக்கப்பட்டது. சப்தகன்னியர்களும் புணரமைக்கப்பட்டு இரண்டு நாட்கள் யாக பூஜைகளை செய்து யாக சாலையிலிருந்து புனித நீர் கலசங்கள் மேள, தாளங்கள் முழங்க ஸ்ரீ மஹா முனீஸ்வரர் மற்றும் சப்தகன்னியர்களுக்கு மஹா கும்பாபிஷேகமானது நடைபெற்றது.       இதில் காட்பாடி, பிரம்மபுரம், சேவூர் , தாங்கல் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.  

• குடியாத்தம் விளையாட்டு அரங்கம் ஆய்வு.

Image
·         குடியாத்தம் நகரில் ரூ . 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் மற்றும் பள்ளிகொண்டாவில்   ரூ . 3.45 கோடி மதிப்பில்   அமைக்கப்பட்டு வரும் மகாகவி பாரதியார் வாழ்வாதார   பூங்கா ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட் டு ஆய்வு.   குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் குடியாத்தம் நகராட்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் ரூ . 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் மற்றும் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி பள்ளிகொண்டா டோல்கேட் அருகில் ரூ .3.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மகாகவி பாரதியார்   வாழ்வாதார பூங்கா   பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, பார்வையிட் டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற பேரவையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ரூ . 3   கோடி மதிப்பில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அதன்படி 2025-26 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற பட்ஜெட் கூட்டத...