• வேலூர் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் 20 ஆண்டுகள் சிறை.
· வேலூர் அருகே தவறான முறையில் பழகி மிரட்டி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ . 2 லட்சம் அபராதம் நீதிமன்றம் உத்தரவு. வேலூர் மாவட்டம் , வேலூர் அருகே பொய்கை கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது இளம் பெண் . இவர் பிளஸ் 2 படித்து வந்தார் . அதே ஊரை சேர்ந்தவர் இவரது சித்தப்பா ரமேஷ் (38). கூலித் தொழிலாளி . இவர் தனது அண்ணன் மகளான பள்ளி மாணவியிடம் தவறான முறையில் பழகி பலமுறை மிரட்டி பாலியல் அத்துமீறல்கள் செய்துள்ளார். இதனால் மாணவிக்கு 2 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு நடந்து வந்த நிலையில் , இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து அனைத்து மகளிர் காவல் துறையினர் ரமேஷை கைது செய்தனர். ...