Posts

• தாயுமானவர் திட்ட ம்.

தாயுமானவர் திட்ட ம் . 202 6- ஆம் ஆண்டு   ஜுன்   மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின்கீழ் பொருட்களை வழங்கும் வகையில் “ஜுன் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில்” தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது   என   மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். அரசாணை (நிலை) 82 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எப்1) துறை நாள்.11.08.2025 மற்றும் அரசாணை (நிலை) 114 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எப்1) துறை நாள்.16.10.2025-களின் படி மாண்புமிகு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு   அவர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணியினை நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் மாதம் தோறும் வாகனங்களில் பொருட்களை எடுத்துச் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 65 முதல் 70 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள வயது முதிர்ந்தோர...

• சமூக சேவகர் விருதினை பெற விண்ணப்பிக்கலாம்.

·         சமூக சேவகர் விருதினை பெற விண்ணப்பிக்கலாம். ·         2026 ஆம்   ஆண்டிற்கான சமூக சேவகர் விருதினை பெற வேலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய நபர்கள் (ம) தொண்டு நிறுவனங்கள் ( https://awards.tn.gov.in ) என்ற இணையதளத்தில் 01.06.2026 முதல் 19.06.2026 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சிறந்த சமூக சேவகருக்கு ரூ. 50,000/- ரொக்கப்பரிசு   மற்றும் சான்றிதமும்   சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ. 1,00,000/- ரொக்கப்பரிசு   மற்றும் சான்றிதமும் வழங்கப்படுகிறது. எனவே சிறந்த சமூக சேவகர்(ம) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகளை பெற்றிட தகுதியுள்ள நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ( https://awards.tn.gov.in ) என்ற இணையதளத்தில் 01.06.2026 முதல் 19.06.2026 வரை விண்ணப்பிக்கலாம். சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் 1.         ...

• கல்பனா சாவ்லா விருதினை பெற விண்ணப்பிக்கலாம்.

·         கல்பனா சாவ்லா   விருதினை பெற விண்ணப்பிக்கலாம். ·         2026-ஆம்   ஆண்டிற்கான   கல்பனா சாவ்லா   விருதினை பெற வேலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய நபர்கள் ( https://awards.tn.gov.in ) என்ற இணையதளத்தில் 01.06.2026 முதல் 19.06.2026 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர்.                 2026-ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கல்பனா சாவ்லா விருது வீர தீர செயலினை புரிந்த பெண்ணிணை பாராட்டி வெள்ளி பதக்கத்தில் தங்க மூலாம் பூசப்பட்ட பதக்கமும், ரூ. 5,00,000 ரொக்கப்பரிசும்   வழங்கப்பட இருக்கிறது. மேற்காணும் விருதினை பெற தகுதியுள்ள நபர்கள் ( https://awards.tn.gov.in ) என்ற இணையதளத்தில் 01.06.2026 முதல் 19.06.2026 வரை விண்ணப்பிக்கலாம். கல்பனா சாவ்லா விருது பெற   விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் 1.                  வீர தீர ...

• சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

·         சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.                    சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 1.                  விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை 2.              இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 3.              ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 4.              கல்வி உதவித்தொகை 5.              திருமண உதவித்தொகை 6.              மகப்பேறு உதவித்தொகை 7. ...

• சுய உதவி குழு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் தேர்வு.

சுய உதவி குழு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் தேர்வு.                    வேலூர் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு 50 சுய உதவி குழுக்களுக்கு ஒரு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (கடன் மற்றும் வங்கி சேவைகள்) தேர்வு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 05.05.2026 அன்றுள்ளவாறு மதிகளம் (இணைய தளத்தில்) உள்ள பதிவுகளின்படி, 114   சமுதாய   வங்கி   ஒருங்கிணைப்பாளர்கள்   மட்டுமே   பணியில்   உள்ளனர். வேலுார் மாவட்டத்தில் தற்பொழுது காலியாக உள்ள 19 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ள விவரம்   பின்வருமாறு.   வ.எண் ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் காலிப்பணியிடத்தின் எண்ணிக்கை 1 அணைக்கட்டு 3 2 குடியாத்தம் 5 3 காட்பாடி 1 ...