Posts

• வேலூரில் சிப்பாய் புரட்சி கருத்தரங்கம்.

Image
 ·          வேலூரில் தென்னிந்திய ஆய்வு மையம் சார்பில் வேலூர் சிப்பாய் புரட்சி கருத்தரங்கம்.              வேலூர் மாவட்டம் , வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் தென்னிந்திய ஆய்வு மையத்தின் சார்பில் சிப்பாய் புரட்சி கருத்தரங்கம் நடைபெற்றது.       இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி 1806 ஜுலை 10- ம் நாள் நடைபெற்றது இதில் வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களின் கொடி இறக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது இந்த புரட்சியில் இந்திய வீரர்கள் நூற்றுகணக்கானோர் கொல்லப்பட்டனர் .        இதனை போற்றும் வகையில் சிப்பாய் புரட்சி கருத்தரங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் வரலாற்று ஆர்வலர் சரவணன்ராஜா , சிவக்குமார் மற்றும் தென்பாரத அமைப்பாளர் பக்தன் உள்ளிட்டோர் பங்கேற்று இந்திய வீரர்களின் தியாகத்தையும் நாட்டுபற்றையும் முதல் முதலில் வேலூர் இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டத்தையும் வரு...

• விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்

Image
·         வேளாண்மை தனிநிதி நிலை அறிக்கை 2026-27 தொடர்பான வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கான   விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் தலைமையில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முன்னிலையில்   நடைபெற்றது. வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தனிநிதிநிலை அறிக்கை 2026-27 தொடர்பான வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய   8   மாவட்டங்களுக்கான   விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் தலைமையில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் டி.சரத்குமார் முன்னிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. முன்னதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சர்க்கரை துறை, விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும...

• இராணிப்பேட்டை காவல் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்.

Image
 ·         இராணிப்பேட்டை மாவட்ட காவல் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்.      இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் தலைமையில் நடைபெற்றது .       இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 38 மனுக்கள் பெறப்பட்டன . மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார் .  

• வேலூரில் ஊர் காவல் படையினர் போராட்டத்திற்கு செல்லாமல் தடுத்து பரேட்.

Image
·         வேலூரில் ஊர் காவல் படையினர் போராட்டத்திற்கு செல்லாமல் தடுத்து பரேட்.                  முறையாக ஊதியம் வழங்கபடவில்லை என சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை   ஊர்காவல் படையினர் அறிவித்தனர்.       இந்த நிலையில் அவர்களை தடுக்கும் நோக்கில் வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள காவல் துறை பயிற்சி மைதானத்தில் அதிகாலையிலேயே அழைத்து வந்து காவலர் மைதானத்தில் அடைத்து வைத்து பரேட் பயிற்சி என கூறி போராட்டத்திற்கு செல்லாமல் தடுக்கபட்டனர்.     ஊர் காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ .560/- தான் வழங்கப்படுகிறது. அதுவும் போக்குவரத்து பணி செய்தால் ரூ .280 மட்டும் வழங்கப்படுகிறது பாண்டிச்சேரியில் ஊர் காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ .1500/- வழங்கப்படுகிறது. அதேபோல் இங்கு வழங்க வேண்டும். மாதத்தில் 30 நாட்களும் வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்...