Posts

• வேலூரில் 220-வது சிப்பாய் புரட்சி நினைவு தினம்.

Image
·   ·       இந்தியாவின் முதல் சுந்தந்திர போராட்டமான சிப்பாய் புரட்சியில் பலியான 800 இந்திய ராணுவ வீரர்களுக்கு வேலூரில் 220- வது சிப்பாய் புரட்சி நினைவு தினத்தில் சிப்பாய் நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி.             வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை அருகில் உள்ள சிப்பாய் புரட்சியின் 220- வது ஆண்டை முன்னிட்டு சிப்பாய் புரட்சி நினைவு தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ்  தலைமையில் அரசு அதிகாரிகள் மலர் தூவி மலர் வளையம் வைத்து காவலர்களின் இசையுடன் அஞ்சலியை செலுத்தினார்கள்.       1806- ம் ஆண்டு ஜுலை 10- ஆம் நாள் வேலூர் கோட்டையினுள்   சிப்பாய் புரட்சி ஏற்பட்டது. அப்போதைய ஆங்கில அரசின் மதராஸ் படையின் முதன்மை தளபதி சர் ஜான் கிரேடக் என்பவன் பல புதிய விதிமுறைகளை புகுத்தினான். இந்துக்கள் கடுக்கன் அணிய கூடாது. நெற்றியில் சமய சின்னங்களை அணிய கூடாது. இஸ்...

• வேலூர் கோட்டையினுள் சிப்பாய் புரட்சி மெழுகுவர்த்தி அஞ்சலி .

Image
 ·          சிப்பாய் புரட்சி தோன்றிய வேலூர் கோட்டையினுள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி   ·          கோட்டையினுள்   சிப்பாய் புரட்சி நினைவு தூணை மத்திய அரசு அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை.         வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையில் உள்ளே உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி தோன்றிய இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலியை செலுத்தினர்.            வேலூர் அரசு அருங்காட்சியகம் , வேலூர் அறிவியல் இயக்கம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இந்த விழாவில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரோட்டரி சங்க செயலாளர் பீமாராவ் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி நிகழ்வை துவங்கினார்.       இதில் அறிவியல் இயக்க பொறுப்பாளர் சிலுப்பன் , முரளிதரன் , சந்துரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இ...

• மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் “விழுதுகள்”.

மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் “ விழுதுகள் ” . “ விழுதுகள் ” உங்கள் ஊருக்கு அருகிலேயே உள்ளது! அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகளும் , அரசு நலத்திட்ட உதவிகளும் இப்போது ஒரே இடத்தில் கிடைக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம்தான் " விழுதுகள்" மையம். மாற்று திறனாளிகள் நலத்துறை , உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 21 வகையான மாற்று திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை எளிதாகப் பெற இந்த திட்டம் உதவுகிறது. அதன்படி , வேலூர் மாவட்டத்தில் , வருவாய் கோட்ட அளவில்   1. அரசு பெண்ட்லேண்ட மருத்துவமனை, வேலூர். 2. அரசு தாலுக்கா   மருத்துவமனை, பேர்ணாம்பட்டு ஆக மொத்தம் 02 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்ப ட்டுள்ளன. விரைவில் இம்மையங்கள்   செயல்பாட்டிற்கு வரவுள்ளது.   மேலும் , தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில்   உள்ள 08 வட்டார அளவில் 1. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊசூர், 2. அரசு ஆரம்ப சுகாதார ...