• வேலூர் நறுவீ மருத்துவமனை சுதந்திர தின விழா.
· வேலூர் நறுவீ மருத்துவமனை சுதந்திர தின விழா. வேலூர் மாவட்டம், வேலூர், நறுவீ மருத்துவமனை வளாகத்தில் 80- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் பால்ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன்நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப்ஜோஸ், தலைமை நிதி அலுவலர் வெங்கட்ரங்கம், பொது மேலாளர் நிதின்சம்பத், அபிராமி நிதின் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.