• வேலூரில் அதிமுக-வினர் ஆர்பாட்டம்.
· வேலூரில் அதிமுக-வினர் ஆர்பாட்டம்.
· விவசாய கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய கோரியும், மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை முறையாக பெற்று தராத தவெக அரசை கண்டித்து அதிமுக-வினர் வேலூரில் ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம், வேலூர், அண்ணா கலையரங்கம் அருகில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான வேலழகன் மற்றும் மாநகர மாவட்ட செயலாளர் அப்பு உள்ளிட்ட திரளான அதிமுக-வினர் கலந்து கொண்டு விவசாய கடனை முழுவதும் தள்ளுபடி செய்யக் கோரியும், மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டி தமிழகத்துக்கு தண்ணீரை முறையாக பெற்றுத் தராத தவெக அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Comments
Post a Comment