• பி.எஸ்.என்.எல். - 80-வது சுதந்திர தினம் பல்வேறு சலுகைகள்.

·         இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது - வேலூர் கோட்ட பொதுமேலாளர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி.

       வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகத்தில் பொதுமேலாளர் ராஜு மற்றும் இணைபொதுமேலாளர் அசோக்நாயக் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் என்றும் மக்கள் சேவை நோக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திர தினம் 80-ம் ஆண்டை கொண்டாடும் வகையில் பி.எஸ்.என்.எல். சிம் கார்டை வெறும் ரூ.1 கொடுத்து வாங்கி சென்று 22 நாட்களுக்கு தினசரி ஒரு ஜிபி டேட்டா மற்றும் இலவச அழைப்புகளை மேற்கொண்டு பேசலாம்.

   இதேபோல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் பொழுது போக்கிற்காக வாடிக்கையாளர்களுக்கு 30 தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை இலவசமாக அளிக்கிறது. அதனையும் கட்டணமின்று காணலாம்.

       மேலும் சேட்டிலைட் போன்களையும் வாடிக்கையாளர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். இந்த 2025-2026 ஆண்டு பி.எஸ்.என்.எல் வேலூர் கோட்டம் ரூ.98.93 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. வருவாய் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 360 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட 2026-27-ம் ஆண்டிற்கான இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். 

     என்றுமே பி.எஸ்.என்.எல். நிறுவனம் குறைந்த கட்டணத்தில் சிறப்பாக சேவையை வழங்கி வருகிறது. அடுத்து 5 ஜி சேவையை வழங்க ஆயத்த பணிகள் முடிந்து மென்பொருள் அப்டேட் செய்தவுடன் விரைவில் பி.எஸ்.என்.எல் 5 ஜி சேவையை துவங்கும் எனவும் கூறினார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.