• ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஆய்வு.
· ஆற்காடு நகர காவல் நிலையத்தில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு. இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் , இராணிப்பேட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட ஆற்காடு நகர காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் . காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வழக்கு கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் . மேலும் , காவல் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார் . இந்நிகழ்வின்போது , இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கனகராஜ் , காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் உடனிருந்தனர் .