• ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஆய்வு.
· ஆற்காடு நகர காவல் நிலையத்தில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின், இராணிப்பேட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட ஆற்காடு நகர காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வழக்கு கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், காவல் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கனகராஜ், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் உடனிருந்தனர்.

Comments
Post a Comment