• வேலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
· வேலூர் மாவட்டத்தில் நாளை 26.09.2026 அன்று காட்பாடி , “ வி . ஐ . டி . பல்கலைகழக “ வளாகத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் . வேலூர் , மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 26.09.2026 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேலூர் , காட்பாடி , “ வி . ஐ . டி . பல்கலைகழக “ வளாகத்தில் நடைபெறவுள்ளது . இம்முகாமில் 100– க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர் . இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10– ஆம் வகுப்பு , 12- ஆம்வகுப்பு , தொழிற்பயிற்சி , பட்ட படிப்பு , பட்டய படிப்பு , முதுகலை பட்டப்படிப்பு , தொழில்நுட்ப கல்வி , செவிலியர் , பார்மஸி , பொறியியல் போன்ற பல்வேறு கல்வி தகுதியுடைய வேலை நாடுநர்கள் கல...