• வி.ஐ.டி. பல்கலைகழக முத்தமிழ் விழா.


 ·         வி.ஐ.டி. பல்கலைகழக முத்தமிழ் விழா.

·         தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தில்  நவீன தீண்டாமை நடைபெற்றது என கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேச்சு.

     வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளி சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றத்தின் 38-ஆம் ஆண்டு துவங்க விழா ஆகிய முத்தமிழ் விழா வி.ஐ.டி. பல்கலைகழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் வி.ஐ.டி. பல்கலைகழக துணைதலைவர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி கலந்து கொண்டு கிளிம்பஸ் ஆப் இந்தியன் பாலிடிக்ஸ் லைவ் என்ற நூலை வெளியிட்டு மாணவர் மன்ற நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.  

            இவ்விழாவில் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசுகையில்,

   மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. மீனாட்சியை சங்க காலத்தில் ஆண் மாதிரி வீரமாக வளர்க்க வேண்டுமென வில் வித்தை மன்னர்களை வென்றவர் என வல்லமை சக்தியாக மீனாட்சியை பார்க்கிறேன். திருகுடமுழக்கிற்கு வர்ணனை செய்தேன். இப்போது சொல்லலாம் சாதியை யார் பார்க்கிறோம் என்று. ஆனால் திருகுட முழுக்கில் பி.டி.ஆர் தியாகராஜன்  குடும்பத்தை சேர்ந்த  அறங்காவல் குழு தலைவர் ருக்மணி தியாகராஜன் அம்மையார் அவரை கோவிலுக்குள் குடமுழுக்கு நடக்கும் இடத்திற்கு செல்ல விடவில்லை. அவர் அமர மரியாதையான இடம் தரவில்லை. ஆனால் கோவில்களுக்கு அவர்கள் இடம் தானமாக தந்துள்ளனர்..

     குருவாயூர் கோவில் மூல விக்ரகம் இவர்கள் செய்து தந்ததுதான். ஆனால் ஜாதியை பார்ப்பதில்லை என்று சொல்லலாம். ஆனால் நவீன தீண்டாமை இருக்கிறது. கைம்பெண் என்ற ஒற்றை காரணத்தால் அவர் பின்னால் தள்ளிவிடப்பட்டிருக்கிறார். ஆகையால் இனிமேல் கேட்க மாட்டீர்கள் யார் ஜாதியை பார்க்கிறார்கள் என்று. ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒலி தமிழாகவும் கோவிலுக்கு ஒலித்தது சமஸ்கிருத மந்திரமாகவும் இருந்தது.

        எங்களுடைய மாநிலத்தில் தமிழை உயர்த்தி பிடித்து எங்களின் அடையாளம் என உயர்த்தி பிடிக்கிறோம். பெண்களை சமமாக பாவித்தோமோ அவைகள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு கிறிஸ்துவ கொள்கையும், சனாதன கொள்கையும், மனுநீதி சொல்லுகின்ற வகையில் கைம்பெண் வாழவே உரிமையில்லை என்ற சித்தாந்தம் பூமியில் மீண்டும் தமிழ்நாட்டில் தலை எடுக்கிறது என்றால் அதனை எதிர்த்து போராட வேண்டிய, குரல் கொடுக்க வேண்டிய கடமை இளைஞர்கள் உங்களுக்கு உள்ளது. புரட்சிகள் செய்து தமிழ்நாட்டை உங்களிடம் கொடுத்தோம். ஆனால் நீங்கள் காட்சி ஊடகத்தில் வருபவர்களை வைத்து சனாதன சிந்தனையை வைத்து மனுநீதி சிந்தனைக்கும் உங்களை பலிகடா ஆக்கி கொண்டிருக்கி றீர்கள் என பேசினார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.