Posts

• தாயுமானவர் பொது விநியோக திட்டம்.

·         தாயுமானவர் பொது விநியோக திட்டம்.                  அரசாணை (நிலை) 82 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எப்1) துறை நாள்.11.08.2025 மற்றும் அரசாணை (நிலை) 114 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (எப்-1) துறை, நாள்.16.10.2025-களின் படி இல்லம் சென்று பொது விநியோக திட்ட பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணியினை நியாய விலை கடை பணியாளர்கள் மூலம் மாதம்தோறும் வாகனங்களில் பொருட்களை எடுத்து சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.                 வேலூர் மாவட்டத்தில் 65 முதல் 70 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளி உறுப்பினர்களை கொண்ட 34,229 குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.  ...

• பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு.

·         250 முதல் 1,000 சதுர மீட்டர் வரை நீர் பரப்பளவு கொண்ட பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பை மேற்கொள்ள வேலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலைஆகிய மாவட்ட ங்களி லுள்ள மீன் வளர்ப்பு விவசாயிகள் பயனடைய லாம் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்.                மீன்வள விவசாயிகள் நிலையான மீன்வளர்ப்பினை தொடர்ந்து மேற்கொள்ளும் பொருட்டு 250 முதல் 1,000 சதுர மீட்டர் வரை நீர்பரப்பளவு கொண்ட பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பை மேற்கொள்ள மீன் குஞ்சுகள், மீன் தீவனம், உரங்கள், பண்ணை உபகரணங்கள் மற்றும் பறவைகளிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கான செலவில் 50% உள்ளீட்டு மானியம் ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூ.20,000/- வீதம் மானியம் வழங்கப்படும் திட்டத்திற்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் சட்டமன்றத்தில் வேளாண் நிதி நிலை அறிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.        ...

• கைதிகளின் மறுவாழ்வுக்கு சிறை அதிகாரிகள் உதவ வேண்டும்.

Image
·          மனிதநேயத்துடனும், அர்பணிப்புடனும் கைதிகளின் விடுதலைக்கு பின்   மறுவாழ்வுக்காக உதவிட சிறை அதிகாரிகள் முன் வரவேண்டும் - சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் பட்டங்களை வழங்கி தெலுங்கானா மாநில சிறை துறை டிஜிபி   சௌமியா மிஸ்ரா பேச்சு.            வேலூர் மாவட்டம் , தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் தமிழ்நாடு, கர்நாடகா , கேரளா , தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் சிறை அதிகாரிகளுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி நிறைவு பட்டமளிப்பு விழாவானது சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள் ப்யூலா , மதன்ராஜ் உள்ளிட்டோரும், திரளான சிறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.       இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மாநில சிறை துறை டிஜிபி சௌமியா மிஸ்ரா கலந்து கொண்டு சிறை அதிகாரிகளுக்கு சான்றுகள், பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வ...

• வேலூரில் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி, விழிப்புணர்வு ஊர்வலம்.

Image
·          வேலூரில் புகையிலை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் .              வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் மாவட்ட புகையிலை கட்டுபாட்டு மையம் சார்பில் “ புகையிலை பொருட்களை ஒழிப்போம் புகையிலை இல்லா இளைஞர் தலைமுறை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலமானது நடைபெற்றது.       கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் துவங்கி வைத்தார். பின்னர் புகையிலை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழியை ஏற்றனர். பின்னர் கல்லூரி மாணவ , மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் துவங்கி வைத்தார்.       இதில் மாணவிகளும், மாணவர்களும் கையில் புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நகரின் முக்கிய வ...

• வேலூர் கூட்டுறவு பண்டக சாலை பட்டாசு விற்பனை.

Image
 ·          வேலூர் மாவட்ட கூட்டுறவு நுகர்வோர் பண்டக சாலையில் பட்டாசு விற்பனை - மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.            வேலூர் மாவட்டம் , வேலூரில் உள்ள கற்பகம் வேலூர் மாவட்ட கூட்டுறவு நுகர்வோர் பண்டக சாலையில் தீபாவளிக்கான பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர்   லீலா அலெக்ஸ்   துவங்கி வைத்தார். இவ்விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத்கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர் . இந்த ஆண்டு பட்டாசு விற்பனை ஒரு கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

• குழந்தைகள் வளர்ச்சி பணிகள் மரக்கன்றுகள் நடவு.

Image
 ·          குழந்தைகள் வளர்ச்சி பணிகள் மரக்கன்றுகள் நடவு.       வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கஸ்பா பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மத்திய ஆரம்ப பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ் . லீலாஅலெக்ஸ் மரக்கன்றுகளை நடவு செய்தார் .            இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்ட அலுவலர் சுமதி, பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர் .    

• வேலூரில் 'கல்மரம்’ நூல் வெளியீடு.

Image
  ·          வேலூரில் கவிஞர் லக்குமிபதி எழுதிய ' கல்மரம் ’ நூல் தொழிலதிபர் ரஞ்சன் வெளியிட்டார்.     வேலூர் மாவட்டம், வேலூர், சண்முகனடியார் சங்கத்தில் , வேலூர் வாசகர் வட்டம் சார்பில் , கவிஞர் வாலியின் 96- ம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் , கவிஞர் ச . லக்குமிபதி எழுதிய ' கல்மரம் ' நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது .     நிகழ்ச்சிக்கு வணிகர் சங்க பேரமைப்பின் வேலூர் மண்டல தலைவர் இரா . ப . ஞானவேலு தலைமை தாங்கினார் . வேலூர் வாசகர் வட்ட தலைவர் ஜெ . ரவி முன்னிலை வகித்தார் .         விழாவில் கவிஞர் ச . லக்குமிபதி எழுதிய ' கல்மரம் ’ நூலை தொழிலதிபர் டி . ரஞ்சன் வெளியிட முதல் பிரதியை தலைமை ஆசிரியை ஜோசப் அன்னையா பெற்று கொண்டார் . கைலாஷ் தபோவனம் ஜெயராம் குருஜி வாழ்த்தி பேசினார் .     கவிஞர் வாலி குறித்து கவிஞர் ஞான . சக்திவேலன் கவிதை வாசித்தார் . கவிஞர் வாலி கவிதை நடையில் எழுதிய ‘ அவதார புருஷன் ‘ நூல் குறித்து கவிஞர் பொன் . செல்வகுமார் , ‘...