• வேலூரில் கூட்டுறவு துறை அமைச்சர் ஆய்வு.
வேலூர் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி, மொத்த விற்பனை பண்டக சாலை, கூட்டுறவு அச்சகம், குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகிய இடங்களில் கூட்டுறவு துறை அமைச்சர் ஆய்வு. கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கத்தின் மூலம் 31 சுய உதவி குழுக்கள் மற்றும் 3 மாற்று திறனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பில் வங்கி கடனுதவிகளும், 3 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ரூ.30,13,083/- மதிப்பில் டிராக்டர் மற்றும் ரொட்டவேட்டர்களை கூட்டுறவு துறை அமைச்சர் வழங்கினார். வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேலூர் மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, மாவட்ட கூட்டுறவு அச்சகம், குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் கூட்டுறவு துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆய்வு செய்து, கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்...