• வேலூரில் திடீர் கனமழை.
· வேலூரில் திடீர் கனமழை.
வேலூர் மாவட்டம், வேலூரில் காலை வெப்பம் நிலவிய நிலையில் மாலையில் கனமழை பெய்தது. காலை முதல் வேலூர் முழுவதும் வெய்யில் இருந்த நிலையில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்வதால் ஓரளவு வெப்பம் தந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இருப்பினும் திடீரென பெய்த மழையின் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் செய்வதறியாது மழையில் பரிதவிப்புடன் சென்றனர்.
வேலூர், சத்துவாச்சாரி, காட்பாடி, பாகாயம், சேண்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Comments
Post a Comment