Posts

• வேலூரில் கூட்டுறவு துறை அமைச்சர் ஆய்வு.

Image
வேலூர் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி, மொத்த விற்பனை பண்டக சாலை, கூட்டுறவு அச்சகம், குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகிய இடங்களில் கூட்டுறவு துறை அமைச்சர் ஆய்வு. கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கத்தின் மூலம் 31   சுய உதவி குழுக்கள் மற்றும் 3 மாற்று திறனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பில் வங்கி கடனுதவிகளும், 3 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு   ரூ.30,13,083/- மதிப்பில் டிராக்டர் மற்றும் ரொட்டவேட்டர்களை   கூட்டுறவு துறை அமைச்சர்  வழங்கினார்.                  வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேலூர் மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, மாவட்ட கூட்டுறவு அச்சகம், குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் கூட்டுறவு துறை   அமைச்சர் வ.காந்திராஜ் ஆய்வு செய்து, கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்...

• தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் நியமனம்.

Image
·          தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக மூத்த பத்திரிகையாளர் மகாலிங்கம் பொன்னுசாமி நியமனம் - பத்திரிகையாளர் சமூகம் மிகுந்த மகிழ்ச்சி பெருமிதம் .       தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக மூத்த பத்திரிகையாளர் மகாலிங்கம் பொன்னுசாமி நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிறது .       முதன் முறையாக முழு நேரப் பத்திரிகையாளராக பணியாற்றிய ஒருவர் தமிழ்நாடு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும் .         மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து , குடும்பத்திலேயே முதல் பட்டதாரியாக உயர்ந்து , தனது கடின உழைப்பாலும் , அர்ப்பணிப்பாலும் , பத்திரிகைத் துறையில் சுமார் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் மகாலிங்கம் பொன்னுசாமி .           புதிய தலைமுறை , நியூஸ் 18 தமிழ்நாடு , டைம்ஸ் ஆஃப் இந்தியா , தி ஃபெடரல் உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றியவர் ....

• வேலூரில் திடீர் கனமழை.

Image
 ·          வேலூரில்    திடீர்  கனமழை .             வேலூர் மாவட்டம் , வேலூரில் காலை வெப்பம் நிலவிய நிலையில்    மாலையில் கனமழை பெய்தது. காலை முதல் வேலூர் முழுவதும் வெய்யில் இருந்த நிலையில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.         வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்வதால் ஓரளவு வெப்பம் தந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இருப்பினும் திடீரென பெய்த மழையின் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் செய்வதறியாது மழையில் பரிதவிப்புடன் சென்றனர்.        வேலூர் , சத்துவாச்சாரி , காட்பாடி , பாகாயம் , சேண்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால்    பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.