Posts

• வேலூர் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு.

Image
வேலூர் மாவட்ட மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்   - கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் தலைமையில் , வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில் நடைபெற்றது.                  வேலூர் மாவட்ட ம், வேலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் மாவட்டத்தில்   மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி, தலைமையில் , வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி, தெரிவித்ததாவது.  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசை பொறுத்த வரையில் , அமைச்சர் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு , அக்குறைகளை களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் அனைத்து...

• வேலூரில் தீபாவளி வாழ்த்து கவியரங்கம்

Image
 ·          வேலூரில் தீபாவளி வாழ்த்து கவியரங்கம் - தொழிலதிபர் உதயசங்கர் தொடங்கி வைத்தார்.     வேலூர் மாவட்டம், வேலூர் வாசகர் வட்டம் சார்பில் ஹோட்டல் கவியரங்கம் ஹோட்டல் துர்கா பவனில்   நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு ஹோட்டல் உரிமையாளரும் , தொழிலதிபருமான கே . எஸ் . உதயசங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் .      " தீபாவளி வாழ்த்து "  என்ற தலைப்பிலான கவியரங்கத்திற்கு கவிஞர் ச . லக்குமிபதி தலைமை தாங்கி பேசினார் . வாசகர் வட்ட தலைவர் ஜெ . ரவி முன்னிலை வகித்து பேசினார் . கவிஞர்கள் குமரன் சீனிவாசன் , பொன் . செல்வக்குமார் , எஸ் . கே . எம் . மோகன் , ஜோசப் அன்னையா , பொன் . ராஜன்பாபு , பொறியாளர் மணிவண்ணன் , ஆசிரியர் சத்யநாதன் , கல்லூரி மாணவி ஆர்த்தி ஆகியோர் தீபாவளி வாழ்த்து கவிதைகள் வாசித்தனர் .  

• மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் அறை ஆய்வு.

Image
 ·          மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆய்வு       வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தின் கிடங்கில் வைக்கப்பட்டு உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையை மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவருடன் காங்கிரஸ் அதிமுக , திமுக , தவெக , தேமுதிக , பாஜக ஆகிய கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.  

• பாஜக-வினர் “தேசம் காப்போம்” ஊர்வலம்.

Image
·          ஆறு மாவட்டங்களை சேர்ந்த பாஜக-வினர் “ தேசம் காப்போம்” என்ற தலைப்பில் கைகளில் தேசிய கொடிகளுடன் ஊர்வலம்   - எச் . ராஜா துவங்கி வைத்தார் .  ·          பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் . ராஜா வேலூரில் பேட்டி     வேலூர் மாவட்டம் , தோட்டப்பாளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் “ தேசம் காப்போம் - இந்தியாவில் கலவரத்தை தூண்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் கயவர்கள் குண்டர்கள் கும்பல் ஆதிக்கத்தை ஒழிப்போம் - எஸ் . ஐ . ஆர் ஆதரிப்போம்” என்ற தலைப்பில்   ஊர்வலமானது நடைபெற்றது. இதனை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் . ராஜா துவங்கி வைத்தார்.      இதில் பாஜக மாநில பொதுசெயலாளர் கார்த்தியாயினி , தமிழக இணைபார்வையாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அருணா , தேசிய பொதுகுழு உறுப்பினர் நரேந்திரன், நிர்வாகிகள் மாவட்ட தலைவர் , தசரதன் , திருப்பத்தூர் மாவட்ட தலைவர் தண்டபானி, கள்ளக்குறிச்சி முனைவர் பாலசுந்தரம்,...