• வேலூரில் தீபாவளி வாழ்த்து கவியரங்கம்
· வேலூரில் தீபாவளி வாழ்த்து கவியரங்கம் - தொழிலதிபர் உதயசங்கர் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், வேலூர் வாசகர் வட்டம் சார்பில் ஹோட்டல் கவியரங்கம் ஹோட்டல் துர்கா பவனில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஹோட்டல் உரிமையாளரும், தொழிலதிபருமான கே.எஸ்.உதயசங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
"தீபாவளி வாழ்த்து" என்ற தலைப்பிலான கவியரங்கத்திற்கு கவிஞர் ச.லக்குமிபதி தலைமை தாங்கி பேசினார். வாசகர் வட்ட தலைவர் ஜெ.ரவி முன்னிலை வகித்து பேசினார். கவிஞர்கள் குமரன் சீனிவாசன், பொன்.செல்வக்குமார், எஸ்.கே.எம்.மோகன், ஜோசப் அன்னையா, பொன்.ராஜன்பாபு, பொறியாளர் மணிவண்ணன், ஆசிரியர் சத்யநாதன், கல்லூரி மாணவி ஆர்த்தி ஆகியோர் தீபாவளி வாழ்த்து கவிதைகள் வாசித்தனர்.

Comments
Post a Comment