• தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின்கீழ் காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் ஆய்வு.
வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம், வெங்கடாபுரம் பகுதி, காட்பாடி வட்டம் பிரம்மபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காட்பாடி வட்டம் இல.கவு.புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கே.வி.குப்பம் வட்டம் கீழ்விலாச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் வேலூர் வட்டம் மேல்மொணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ – மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளி லும் காலை உணவுத் திட்ட ம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 25-8-2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடக்கி வைக்கப்பட்டது. ...