• மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட ஆய்வு கூட்டம்.

 

     வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

      இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதினை பெற்ற காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிசுத் தொகையாக ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையினை ஆட்சியர் பெ.குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.

      இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு. பானுமதி, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Comments