Posts

Showing posts from September, 2023

• P.T.Lee பொறியியல் கல்லூரி - கணிணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை கூட்டமைப்பு துவக்க விழா.

Image
  ·          P.T. Lee செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணிணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை கூட்டமைப்பு துவக்க விழா ! ·          கணிணி அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய வகையான மென்பொருள்-இயக்குனர் சத்தியநாராயன்முருகன் விளக்கம்.         காஞ்சிபுரம் மாவட்டம் , ஊவேரியில் , பி . டி . லீ . செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி செயல்படுகிறது . இக்கல்லூரி , P.T. Lee செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவரும் , சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான , நீதியரசர் பொன் . கலையரசன் மற்றும் அறங்காவலர்கள் குழுவின் வழிகாட்டுதலுடன் மற்றும் கல்லூரியின் இயக்குனரும் , தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் மேனாள் இணை இயக்குனருமான , Dr.M. அருளரசு அவர்களின் வழிநடத்துதலுடன் கணிணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை கூட்டமைப்பு (Computer Science and Information Technology Association) துவக்க விழா இன்று (30.09.2023) வெகு விமரிசையாக நடைபெற்றது .          இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் , கணிணி அறிவியல் துற

• கோட்டை நோக்கி பேரணியில் பங்கேற்க வேலூர் மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பயணம்.

Image
        பழைய ஓய்வூதிய திட்டதை நடைமுறைப்படுத்த வேண்டும் , பறிக்கப்பட்ட மத்திய அரசின் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சென்னை மாநகரில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் கோரிக்கைகளின் மீது தமிழ்நாடு அரசின் பாராமுகத்தை உடைத்தெறியும் பேரணியான " கோட்டை நோக்கிப் பேரணி " யில் பங்கேற்க வேலூர் மாவட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் 500 பேர் வேலூரில் இருந்து புறப்பட்டனர் .                இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் எம் . பி . சுரேஷ்குமார் , செயலாளர் ஆ . சீனிவாசன் , பொருளாளர் விஜயலட்சுமி , மாநில செயற்குழு உறுப்பினர் ஆ . ஜோசப்அன்னையா , கல்வி மாவட்ட செயலாளர் காசி , துணைத்தலைவர் வெங்கட்ராமன் ஆகியோர் தலைமையில் வேலூர் , கணியம்பாடி , அணைக்கட்டு , பேர்ணாம்பட்டு , குடியாத்தம் , கே . வி . குப்பம் , காட்பாடி ஆகிய பகுதியிலிருந்து 6 பேருந்துகள் , மற்றும் வேன் மூலம் புறப்பட்டனர

• மாணவிகளின் சேவை பணிகளுக்கு துணைமேயர் பாராட்டு.

Image
        வேலூர் மாநகராட்சி காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அமைவு   சார்பில்    சிறப்பு முகாம் தொடக்க விழா காட்பாடி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.        பள்ளியின் தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார். ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். முன்னதாக திட்ட அலுவலர் உ.சுதா வரவேற்றார்.      வேலூர் மாநகராட்சியின் துணைமேயர் எம்.சுனில்குமார் துவக்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,         நாட்டு நலப்பணி திட்டத்தில் இணைந்துள்ள மாணவிகள் சமூக சேவையில் தன்னை இணைத்துக் கொண்டு பள்ளி வளாகத்தை தூய்மை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்வது பாராட்டுதற்குரியது. உங்களுடைய பணிகளை நான் பாராட்டுகின்றேன்.           அதே வேளையில் கல்விதான் உங்களை முன்னேற்றம் அடையச் செய்யும். எனவே இந்த முகாம் பணிகளுக்குப் பிறகு நீங்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினமும் படிக்க வேண்டும். உங்களை உயர்த்திக் கொள்வதற்கு நீங்கள் நல்ல முறையில் கல்வி பெற்று சிறப்பாக இடம் பெற வேண்டும் என வாழ்த்தினார்.         வேலூர் மாநகராட்

• மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு

Image
  ·          வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் ( இடைநிலை கல்வி) முஅங்குலட்சுமி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு         செங்கல்பட்டு மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலராக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை கல்வி மு . அங்குலட்சுமி பதவி உயர்வு பெற்றுள்ளார்.        அவருக்கு தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தில் மாநில தலைவர் சேனாஜனார்த்தனன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எஸ் . ராஜேஷ்கண்ணன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பழனி, செயலாளர் எஸ் . எஸ் . சிவவடிவு உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். மேலும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கண்காணிப்பாளர்கள் தாமோதரன், சீனிவாசன் உள்ளிட்டோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  

VELLORE DISTRICT RAINFALL.

Image
 

• தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் ஆலோசனை கூட்டம்.

Image
        வேலூர் மாவட்டத்திற்கு இன்று தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிசன்கோயல் வருகை தந்தார் . அவருடன் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ . குமாரவேல்பாண்டியன் முன்னிலையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .               இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு . பாப்பாத்தி உட்பட பலர் உடன் இருந்தனர்.  

• புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை

Image
  ·          வேலூர் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலயம் ·          கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயம் ·          வெங்கடேச பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரங்கள் செய்து வழிபாடு .            வேலூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சிறப்பு அபிஷேகங்களை செய்து துளசி மாலைகள் மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்களை செய்து வெள்ளி கவசம் அணிவித்து மகாதீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.       இதேபோன்று வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்திலும் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களை செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

தாய்மார்கள் பாலூட்டும் அறை.

Image
  வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக த்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை.      வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையினை மாவட்ட ஆட்சியர் பெ . குமாரவேல்பாண்டியன் இன்று திறந்து வைத்தார் .                    இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் த . மாலதி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, துணை ஆட்சியர் ( பயிற்சி) பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா

Image
·         வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் வேலூர் நகர்ப்புற வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா .             வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் வேலூர் நகர்ப்புற வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் நகர அரங்கில் இன்று ( 29.09.2023) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.                 இவ்விழாவில் வேலூர் நகர்புற வட்டாரத்தை சேர்ந்த 100 கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர். அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் புடவை , மஞ்சள் குங்குமம் உட்பட சீர் வரிசைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் , வேலூர் சட்டமன்ற உறுப்பினர் , மாநகராட்சி மேயர் , துணை மேயர் ஆகியோர் வழங்கினார்கள்.                  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஐந்து வகையான சத்தான உணவுகள் பரிமாறப்பட்டன.                  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது                 சமுதாய வளைகாப்பு என்பது பெயரளவில் நடத்தப்படும் விழா அல்ல. மன