• வேலூர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.

·        வேலூர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.

  ·      வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமை அதனை நீங்கள் மக்களிடம் சொல்ல வேண்டும்.

   ·     பொது தேர்வில் 100% தேர்ச்சியை பெற நன்றாக படிக்க வேண்டுமென ஆட்சியர் சுப்புலெட்சுமி பேச்சு.

            வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் வரும் 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும். அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

   விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கொடியசைத்து துவங்கி வைத்தார். அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து வள்ளிமலை கூட்டு சாலை வரையில் நூற்றுக்கணக்கான மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மீண்டும் இந்த ஊர்வலம் பள்ளியில் நிறைவடைந்தது.

     இதில் ஆட்சியர் சுப்புலெட்சுமி பேசுகையில், 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைவரும் கட்டாயம் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி பெறும் வகையில் நன்கு உழைத்து கடுமையாக படித்து வேலூர் மாவட்டத்தை கல்வியில் முன்னேற்றம் காணும் வகையில் உங்களின் தேர்ச்சி சதவிகிதம் இருக்க வேண்டுமென பேசினார்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.